Friday, April 19, 2019

சித்ரா பௌர்ணமி வ்ரதம்

#சித்ரா_பவுர்ணமி #விரதம்_இருப்பது_எப்படி?
☘☘☘☘☘☘☘☘
சித்ராபவுர்ணமியன்று வீட்டை சுத்தம் செய்து பூஜைஅறையில் விநாயகர் படத்தை வைத்து அரிசி மாவால் சித்ரகுப்தன் படம் வரைந்து கையில் ஏடும், எழுத்தாணியும் வரைய வேண்டும். சித்ரகுப்தா என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும். அன்று உப்பில்லாத உணவுகளையே (கனிகள்) உண்ண வேண்டும்.

மாலையில் பவுர்ணமி தினம் உதயமானதும் சித்ரகுப்தனுக்கு பூஜை செய்ய வேண்டும். தலைவாழை இலையில் சர்க்கரை பொங்கல் அல்லது வெண்பொங்கலை படைக்க வேண்டும். பயிற்றம் பருப்பு, எருமைப்பாலும் சேர்த்து பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம்.

படையலுடன் எல்லாக்காய்கறிகளும் போட்ட கூட்டு நிவேதிக்க வேண்டும். தொடர்ந்து தீபாராதனை காட்டி ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் கொடுக்க வேண்டும். ஏழை மாணவர்களுக்கு பேனா, பென்சில், நோட்டு கொடுக்கலாம். அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது.

சித்ராபவுர்ணமி விரதம் இருந்து சிவபெருமானை வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும். ஆயுளை அதிகரிக்க செய்யும் ஆற்றல் இந்த விரதத்திற்கு உண்டு. மேலும் மன அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும், வறுமை அகலும். புண்ணியங்கள் சேரும்.

திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சித்ராபவுர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று அன்னதானம் செய்தால் கல்வி, வேலை, பதவி, அரசியல், ஆரோக்கியம், திருமணம், வழக்கு குடும்பப்பிரச்சினைகள் நீங்கி மேன்மை உண்டாகும்.

Thursday, April 18, 2019

கருடாழ்வார் மற்றும் மஹாவிஷ்ணு இடையே நடந்த சம்பாஷணை

படித்ததில் பிடித்தது...
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஒருமுறை மகாவிஷ்ணு அவருடைய பிரியமான கருடனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது
திருமால் கருடனை பார்த்து கேட்டார்

"இந்த உலகில் எத்தனை வகையான மனிதர்கள்
உள்ளனர் கருடா...?" என்று.

அதற்கு சற்றும் யோசிக்காமல் கருடன் சொன்னார்

"மூன்று வகையான மனிதர்கள் உள்ளனர்
மகா பிரபு" என்றார்.

மகாவிஷ்ணு "என்ன மூன்று விதமான மனிதர்களா? இத்தனை கோடி மக்களில் மூன்று விதமான
மக்கள் தானா உள்ளார்கள்" என்று கேட்டார்.

"மகா பிரபு ஒன்றும் அறியாதவர் போல நீங்கள் கேட்பது ஏன்...? என்னை வைத்து என்ன
நாடகமோ தெரியவில்லை...? ஆனால் தங்கள் அருளால் நானறிந்தவரை *மூன்று விதமான*
மக்கள் தான் உள்ளனர் என்று கூறினார் கருடன்.

"அப்படியானால் அவர்களைக் கூறு பார்க்கலாம்" என்றார் மகாவிஷ்ணு.

கருடன் சொன்னார்

"பிரபு முதல் வகையினர்: *பறவையும் அதன் குஞ்சுகளும்* போல் உள்ளனர்.

இரண்டாம் வகையினர்: *பசுவும் அதன் கன்றும்* போல் உள்ளனர்.

மூன்றாம் வகையினர்: *கணவனும் மனைவியும்* போல் உள்ளனர் அவ்வளவு தான் மகா பிரபு"
என்றான்.

மகாவிஷ்ணு சும்மா விடுவாரா !!! "சற்று விளக்கமாக புரியும்படி சொல்" என்றார்.

சொல்ல துவங்கினார் கருடன்

*முதலில் பறவையும் அதன் குஞ்சுகளும்* எப்படியென்றால் ...
🦇🦇🦇🦇🦇🦇
பறவை முட்டையிட்டு குஞ்சு பொரித்துவிட்டு அதன் குஞ்சுகளுக்காக உணவு தேடிப்
போகிறது, அது சென்று வருவதற்குள் பாம்புகளும் மற்ற பறவைகளும் தனது உணவாக அந்த
குஞ்சுகளையே உண்டு விடுகிறது, காணாமல் போன குஞ்சுகளுக்காக பறவை பெரிதாக
கவலையெல்லாம் படுவதில்லை, இருப்பதற்கு உணவு ஊட்டும்.

அதுபோல் குஞ்சுகளுக்கும்
தன் வாயில் ஊட்டப்படும் உணவு தான் தெரியும், தன் தாய் யார், தகப்பன் யார்
போனது வருமா வராதா எதுவும் தெரியாது, நாளானவுடன் பறக்க முயற்சி செய்து கீழே
விழுந்து மடியும், மீந்து போன பறவை வாழும் வரை வாழும், அவ்வளவு தான்...

இந்த வகை மனிதர்கள் இது போலத்தான் கிடைத்த வேலையை செய்வார்கள், கிடைத்ததை உண்பார்கள், இல்லையா பட்டினி கிடப்பார்கள்.

வாழ்க்கை சக்கரத்தில் அகப்பட்டு , புற வாழ்க்கைக்காக அலைந்து , திரிந்து , கடைசியில் மரணிப்பார்கள்.

*அவர்களுக்கு பகவானே உங்களை நினைக்க கூட தெரியாது*.
வாழ்வார்கள், உயிரோடு வாழும் வரை அவ்வளவு தான்.

*இரண்டாவது பசுவும் கன்றும்* எப்படியென்றால்...
🐂🐂🐂🐂🐂🐂🐂
பசு ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும், அதன் கன்று ஓரிடத்தில்
கட்டப்பட்டிருக்கும். கன்று பசுவைப் பார்த்து சப்தமிடும், பசு கன்றினைப்
பார்த்து சப்தமிடும், கன்றுவுக்கு தெரியும், தாயின் மடியிலிருக்கும் பால் அருந்தினால் தான் பசி அடங்கும் என்று. ஆனாலும் அதன் கழுத்தில் கட்டப்பட்டுள்ள
ஒரு முழம் கயிறு அதனை அதன் தாயிடம் செல்ல விடாமல் தடுக்கிறது, கன்று இழுத்து
இழுத்துப் பார்த்து ஏங்கித் தவிக்கும்.

அது போல *ஒரு சாராருக்கு உங்களை தெரியும்* வரும் வழியும் தெரியும்,

*உங்களால் தான் மனித வாழ்வே நிரந்திர சுகம் பெறும் என்பதும் தெரியும்*,
ஆனாலும் உங்களோடு வர முடியாமல் *பாசம் என்ற ஒரு முழ கயிற்றில் மாட்டிக்கொண்டு* பகவானே உங்களை பார்த்து ,பார்த்து ஏங்கி தவிக்கும்.

*மூன்றாவது கணவனும் மனைவியும்* எப்படியென்றால்...
👳‍♀🧕  👳‍♀🧕 👳‍♀🧕
முன் பின் அறியாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவன், அவளிடம் முகம்
கொடுத்து கூட பேசமாட்டான், அவளைப் பிடிக்காமல் ஒதுங்கி ஒதுங்கி போவான், ஆனால்
அவளோ, அவனைப் பார்த்த நாளிலிருந்து அவன் நினைவால் இருந்து அவனுக்கு பிடித்த
வகையில் உடையுடுத்தி, அவனுக்கு பிடித்த வகையில் உணவு சமைத்து, அவனுக்கு
பிடித்த வகையில் தன்னை அலங்கரித்து கொண்டு,

தான் அவனுக்காகவே பிறந்தவள் என்பதை
அவனுக்கு உணர்த்தி அவனை தன் பக்கம் ஈர்ப்பாள்.

முதலில் வெறுத்த அவன் ஓராண்டுக்குள் அவள் அன்பில் கரைந்து அவள் செல்லும் இடமெல்லாம் செல்கிறான்,
அவளை பிரிய மறுக்கிறான்.

அது போல ஒரு சாரார் இறைவா உங்களை கண்டதில்லை .

ஒரு நாள் யாராவது ஒருவர் மூலமாக
உணர்த்தப்பட்டு உங்களை காண முற்படும் வேளையில், உங்களுக்கு பிடித்தப்படி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள்.

முதலில் சோதிக்கும் நீங்கள் எங்களின் தூய்மையான அன்பில் கரைந்து எங்களோடு வருகி்றீர்கள் எங்களோடு
உறவாடுகிறீர்கள் , முடிவில் உங்களோடு எங்களை ஐக்கியப்பட அனுமதிக்கிறீர்கள். நாங்களும் ஆனந்தமாக உங்களோடு கலந்து விடுகிறோம்

ஆக மூன்று விதமான மனிதர்கள் தான் உலகில்
உள்ளனர் என்றார் கருடன்.

மனம் மகிழ்ந்த *மகாவிஷ்ணு கருடனை வாழ்த்தி தன்னுள் ஏற்றுக் கொண்டார்*....

மஹாபெரியவா தந்த அக்ஷதை

🤘🏵🤘🏵🤘🏵🤘🏵
*மஹா பெரியவா அளித்த அட்சதை!!🙏*

ஒருமுறை விழுப்புரத்துக்கு அருகே வெங்கிடாத்திரி அகரம் என்ற கிராமத்தில் முகாமிட்டிருந்தார் பெரியவா. சென்னை, திருச்சி, கும்பகோணம், சேலம் போன்ற பல ஊர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பெரியவா தரிசனத்துக்காக அங்கே குவிந்தனர்.

இந்தக் கிராமத்தில் மஹாபெரியவா முகாமிட்டிருப்பது அறிந்து, அவரைத் தரிசனம் செய்வதற்காகத் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு சேலத்தில் இருந்து பயணமானார் ராமசாமி ஐயர்.

வெங்கிடாத்திரி அகரத்தில் மஹாபெரியவாளை உள்ளம் குளிரத் தரிசித்து விட்டு, சேலம் புறப்படுவதற்காக உத்தரவு கேட்டார் ராமசாமி

. பெரியவாளும் புன்னகையுடன் அவரை ஆசிர்வதித்து, உத்தரவு கொடுத்தார். அப்போது மேனாவில் (யாத்திரையின் போது பயன்படுத்தப்படும் பல்லக்கு) இருந்தபடியே பக்தர்கள் எல்லோருக்கும் அட்சதையை அவரவர் வஸ்திரத்தில் ஆசிர்வாதமாகப் போட்டுக் கொண்டிருந்தார் பெரியவா.

கருணைத் தெய்வத்தின் திருக்கரங்களால் அட்சதை பெறும் பாக்கியத்தைப் பெரும் பேறாக எண்ணிய பலரும், தங்களது மேல்வேஷ்டியை மற்றும் புடவைத் தலைப்பை அவருக்கு முன் நீட்டி, அதில் விழும் அட்சதையைத் தங்கள் கண்களில் ஒற்றிக் கொண்டு பத்திரப்படுத்தினர்.

இப்படி அட்சதை பெற்றுக் கொள்ள விரும்பி நின்றிருந்தவர்களின் நீண்ட வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டார் ராமசாமி.

பெரியவாளின் அட்சதையுடன் பயணப்படலாமே என்பது அவரது எண்ணம். ராமசாமியின் மனைவியும் ஓர் ஓரமாக நின்றபடி பெரியவா தரிசனத்தில் மெய்மறந்து காணப்பட்டார்.

வரிசையில் நின்றிருந்தவர்கள், ஒவ்வொருவராக நகர்ந்து கொண்டிருந்தனர். இப்போது ராமசாமி ஐயரின் முறை வந்தது.

மிகுந்த பயபக்தியுடன் தனது மேல்வஸ்திரத்தை அகலமாகப் பிரித்து பெரியவாளின் முன்னே ராமசாமி நீட்டினார். ஆனால் நிகழ்ந்தது வேறு விதமாக இருந்தது.

தன் ஆசிர்வாதமான அட்சதையை அவரது வஸ்திரத்தில் போடாமல் தரையில் மண்ணோடு மண்ணாகப் போட்டார் பெரியவா.

இது கண்டு மிகவும் கலக்கமுற்றார் ராமசாமி. அருகே இருந்த அவரது மனைவியும் ஏகத்துக்கும் வருத்தமுற்றார்

. தரையில் விழுந்த அட்சதையை எடுக்கலாமா, வேண்டாமா என்கிற தயக்கத்தில் இருந்தனர் இருவரும்.

அப்போது முகம் நிறைய பிரகாசத்தோடு, ‘என்ன ராமசாமி..அட்சதை தரைல விழுந்துடுத்தேனு பார்க்கறியா… மண்ணோடு மண்ணாக அந்த அட்சதையை அப்படி எடுத்து நீயும் உன் பார்யாளும் மடில முடிஞ்சு வெச்சுக்கோங்கோ’ என்றார் பெரியவா நிதானத்துடன்.

இந்த நிகழ்வைக் கண்டு சுற்றி நின்றவர்களும் ஒரு கணம் திகைத்தனர். எல்லோருக்கும் அவரது மேல்வஸ்திரத்திலோ, புடவையிலோ அட்சதையை ஆசிர்வாதத்தோடு தெளிந்த மஹாபெரியாவா, இவரது முறை வரும்போது மட்டும் ஏன் மணலில் – அதாவது தரையில் அட்சதையைப் போட்டார். இதற்கு என்ன அர்த்தம் என்ன என்று குழம்பினார்கள்.

மஹாபெரியவா என்கிற கருணைத் தெய்வம் மனம் கனிந்து சொல்கிறதே என்பதற்காக தரையில் குனிந்து, மணலோடு மணலாகச் சிதறிக் கிடந்த அட்சதையை ஒருவிதமான உணர்ச்சியுடன் பொறுக்கி எடுத்து மடியில் முடிந்து கொண்டனர் இருவரும்.

‘போயிட்டு வாப்பா ராமசாமி…. அதான் உனக்கு உத்தரவு அப்பவே கொடுத்துட்டேனே! என்று வரை புன்சிரிப்புடன் வழியனுப்பினார் பெரியவா.

ராமசாமிக்கு அடுத்து வரிசையில் வந்தவர்களுக்கு வழக்கம் போல் மேல் வஸ்திரத்திலேயே அட்சதை போட்டு ஆசிர்வதித்து அனுப்பிக் கொண்டிருந்தார் மஹான்.

சேலம் திரும்புவதற்கு ராமசாமி ஐயருக்கு மஹாபெரியவா உத்தரவு கொடுத்த பிறகு, வெங்கிடாத்திரி அகரத்தில் இருந்து மனைவியுடன் வண்டியில் புறப்பட்டார்.

சுகமான காற்று உடலை வருடிக் கொண்டிருந்தாலும், ராமசாமி ஐயரின் மனம், மணலில் போட்ட அட்சதையிலேயே இருந்தது.

சேலத்துக்கு வண்டியில் போகும்போது ராமசாமியும் அவரது மனைவியும் இயல்பான நிலையில் இல்லை. அட்சதையை பெரியவா மணல் மேல் போட்ட நினைவே ஃப்ளாஷ்-பேக் போல் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது.

ஏன் மணலில் அட்சதையைப் போட்டு அதை எடுத்துக் கொள்ளச் சொன்னார்? மற்றவர்கள் போல் நமக்கு வஸ்திரத்தில் போடவில்லையே… இந்த நிகழ்வு எதை உணர்த்துகிறது?

சேலத்தை நோக்கி வண்டி வேகத்தில் போய்க் கொண்டிருந்தாலும் ராமசாமியின் மனதில் வெறுமையே இருந்தது.

எல்லோருக்கும் அவரவர் மேல்வஸ்திரத்திலோ, புடவைத் தலைப்பிலோ விழுமாறு அட்சதையைப் போட்ட மஹா பெரியவா, தனக்கு மட்டும் மேல்வஸ்திரத்தில் போடாமல் ஏன் தரையில் போட்டார் என்று மருகிப் போனார் ராமசாமி ஐயர்.

எவ்வளவு முயன்றும்,யோசித்தும் இதற்கான விடை அவருக்குக் கிடைக்கவில்லை. மகான்களின் இயல்பை மனிதர்கள் அறிய முடியுமா?

ஆனால், சேலத்துக்கு வந்ததும் இந்த நிகழ்வு அன்றே அவரது நினைவில் இருந்து விடுபட்டது. காரணம் - வழக்கமான அவரது வக்கீல் பணிகள். இயல்பு வேலைகளில் பிஸியானார் ராமசாமி ஐயர்.

வெங்கடாத்திரி அகரத்தில் இருந்து சேலத்துக்கு வந்த இரண்டாம் நாள் மதியம்... அன்று ஏதோ முக்கிய பணிக்காக வீட்டில் இருந்த ராமசாமி ஐயருக்கு, கனமான பதிவுத் தபால் ஒன்று வந்தது.

அனுப்பியவர் முகவரியைப் பார்த்தார். அதில், அவரது மாமனாரின் பெயரும் விலாசமும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சாதாரணமாக ஒரு இன்லேண்ட் கடிதம் எழுதி, சம்பிரதாயத்துக்கு விசாரிப்பவர், பதிவுத் தபாலில் என்ன அனுப்பி இருப்பார் என்கிற ஆவலுடன், மனைவியையும் உடன் வைத்துக் கொண்டு பிரித்தார்.

உள்ளே - ரெஜிஸ்திரார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரம் ஒன்று இருந்தது. ஒரு கணம் குழம்பியவர், பத்திரத்தில் உள்ள வாசகங்களை முழுக்கப் படித்து விட்டுப் பிரமித்துப் போனார்.

பத்திரத்துடன் இருந்த ஒரு கடிதத்தில், ராமசாமியின் மாமனார் தன் கைப்பட எழுதி இருந்தார்: ‘வக்கீல் தொழிலில் சிறந்து விளங்கினாலும், சொந்தமாக நில புலன் எதுவும் இல்லாமல் இருந்து வரும் உங்களுக்கு - உங்கள் பெயரிலேயே ஏதாவது நிலம் எழுதி வைக்கலாம் என்று திடீரெனத் தோன்றியது.

அதன் வெளிப்பாடுதான், இத்துடன் இணைத்திருக்கும் பத்திரம். தங்கள் பெயருக்குப் பதிவு செய்து, சில ஏக்கர் நன்செய் நிலங்களை எழுதி வைத்திருக்கிறேன்.

இறைவனின் அருளுடனும், தாங்கள் வணங்கும் மகா பெரியவா ஆசியுடனும் இதை நல்லபடியாக வைத்துக் கொண்டு சுபிட்சமாக வாழுங்கள்.’

ராமசாமி ஐயருக்கும் அவரது மனைவிக்கும் ஏக சந்தோஷம்.இருக்காதா பின்னே!எதிர்பார்க்காத நேரத்தில் இப்படி ஒரு சொத்து - அதுவும் நல்ல நன்செய் நிலம் - தானாகக் கைக்கு வந்து சேர்ந்தால், மனம் மகிழ்ச்சியில் துள்ளாதா? பரவசப்பட்டுப் போனார்கள் இருவரும்.

மாமனாரிடம் இருந்து தானமாக வந்த நில புலன்களில் ஏற்கெனவே பயிர்கள் நன்றாக விளைந்து கொண்டிருந்தன.

மகசூலும் நன்றாக இருந்தது. அதனால், இதைப் பராமரிப்பதில் பெரிதாக ஒன்றும் சிரமம் இல்லை ராமசாமி ஐயருக்கு. நேரம் கிடைக்கும்போதெல்லாம் நேரில் போய் நல்ல முறையில் பார்த்து வந்து கொண்டிருந்தார்.

இதற்கிடையில் வெங்கடாத்திரி அகரத்தில் மகா பெரியவா,அட்சதையை ஏன் தரையில் போட்டார் என்கிற சம்பவத்தை ஏறக்குறைய மறந்தே போயிருந்தார் ராமசாமி ஐயர்.

ஆனால், அப்படி அட்சதை போட்டு ஆசி புரிந்த மகா பெரியவா இதை மறப்பாரா?

நில புலன்கள் சேர்ந்தால் நிலச் சுவான்தார்தானே! இப்படி ஒரு நிலச் சுவான்தார் ஆன பிறகு, ‘இந்த நல்ல செய்தியை மகா பெரியவாளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.’ என்று எண்ணினார் ராமசாமி ஐயர்

. ஒரு நாள் காஞ்சிக்குப் போய் அவரைத் தரிசிக்க ஆர்வம் கொண்டார்.அந்த நாளும் கூடிய விரைவிலேயே வாய்த்தது.

தனது நிலத்தில் இருந்து முதன் முதலாக அறுவடை ஆன நெல்லில் இருந்து, அரிசி அரைத்துக் கொண்டு, அந்த அரிசி மூட்டைகளுடன் காஞ்சிபுரம் மடத்துக்கு வந்தார் ராமசாமி ஐயர்.

அந்த மூட்டைகளுள் ஒன்றில் இருந்து சில அரிசி மணிகளை எடுத்து, தன் மேல்துண்டில் முடிந்து வைத்துக் கொண்டு ஒரு குழந்தையைப் போல் மகா பெரியவா முன்னால் போய் நின்றார். உடன், அவரது மனைவியும் இருந்தார்.

“வாப்பா ராமசாமி... சேலத்துலேர்ந்து வர்றியா? இல்லே உன் வயல்லேர்ந்து நேரா இங்கே வர்றியா?” - மகா பெரியவா கேட்டதும், ராமசாமி ஐயர் வாயடைத்துப் போனார். ஏதும் பேசவில்லை.

மகா பெரியவாளே தொடர்ந்தார்:“இப்பல்லாம் உன் நிலத்துல விளைஞ்ச அரிசியைத்தான் சமைச்சு சாப்பிடுறாயாமே?”

மகா பெரியவா திருவாய் மலர்ந்தருளிய மறுகணம் விதிர்விதிர்த்துப் போனார் ராமசாமி ஐயர். சட்டென்று நிதானத்துக்கு வந்து

, “ஆமா பெரியவா.

வெங்கடாத்திரி அகரத்துக்கு வந்து பெரியவாளைத் தரிசனம் பண்ணிட்டு ஊருக்குப் போன உடனே,என் மாமனார்கிட்டேர்ந்து பத்திரம் வந்தது.

நிலமே இல்லாமல் இருந்த எனக்கு, அவராவே சில ஏக்கர்களை எழுதி சாசனம் பண்ணி, தபால்ல அனுச்சிருந்தார்

. அதான் பெரியவாளைப் பாத்துச் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்.முதல் விளைச்சல்ல வந்த சில அரிசி மூட்டைங்களையும் மடத்துக்குக் காணிக்கையா கொண்டு வந்திருக்கேன்.”

“எல்லாம் சரிதான். அன்னிக்கு உன் மேல்வஸ்திரத்துல போட வேண்டிய அட்சதையை நிலத்துல போட்டபோது குனிஞ்சு எடுக்கறப்ப, அவ்வளவு வருத்தப்பட்டியே ராமசாமி... இன்னிக்கு அதே மாதிரிதானே, இந்த அரிசியைக் கொண்டு வர்றதுக்கும் குனிஞ்சு நிமிர்ந்திருக்கே! உன் சொந்த நிலத்துல குனிஞ்சு, கதிர் அறுத்த நெல்லை அரிசி ஆக்கி, உன் மேல்வஸ்திரத்துல முடிஞ்சு வெச்சுண்டு இப்ப என்னைப் பாக்க வந்திருக்கே?! இல்லியா?” என்று சொல்லி விட்டு, இடி இடியென பெரியவா சிரித்தபோது, ராமசாமியின் கண்களில் இருந்து பொலபொலவென்று நீர் சுரந்தது. மகா பெரியவாளின் ஞான திருஷ்டியை உணர்ந்து மெய் சிலிர்த்தார்.

பெரியவாளின் இந்தப் பேச்சைக் கேட்ட பிறகு அவரது மனைவிக்குப் பேச்சே எழவில்லை.

மேல்வஸ்திரத்தை எடுத்துப் பிரித்து, அதில் முடிந்து வைத்திருந்த அரிசியைக் கையில் திரட்டி, மகா பெரியவாளின் முன்னால் இருந்த ஒரு பித்தளைத் தட்டில் சமர்ப்பித்தார் ராமசாமி. பிறகு, அவரது திருப்பாதங்களுக்குப் பெரிய நமஸ்காரம் செய்தார்.

“ஆமா பெரியவா... அன்னிக்கு நீங்க பண்ண அனுக்ரஹத்தாலதான் எனக்கு இன்னிக்கு இப்படி ஒரு சொத்து கிடைச்சிருக்கு.

கூடிய சீக்கிரமே நிலம் உனக்குக் கிடைக்கப் போறதுங்கறதை சொல்லாம சொன்னேள்! அட்சதையை நிலத்துல போட்டேள். இந்த மூளைக்கு அப்ப இது எட்டலை.

உங்களோட கருணைக்கும், தீட்சண்யத்துக்கும் அளவேது பெரியவா” என்று சொல்லி, முகத்தை மூடிக் கொண்டு தேம்பலானார்.

இதை அடுத்து, அந்தப் பரப்பிரம்மம், தியானத்தில் மூழ்கியது.

‘சொந்தமாக நில புலன் உனக்குக் கிடைக்கும்’ என்பதை தீர்க்க தரிசனமாக ராமசாமி ஐயருக்கு உணர்த்த விரும்பிய மகா பெரியவா, வஸ்திரத்தில் போட வேண்டிய அட்சதையைத் தரையில் போட்டதன் தாத்பர்யம் அவரைத் தவிர வேறு யாரால்தான் புரிந்து கொள்ள முடியும்?

!!மஹா பெரியவா பாதகமல சரணம்!!

ஹர ஹர சங்கர..  ஜெய ஜெய சங்கர..
💧💧💧💧💧💧💧💧

Saturday, April 13, 2019

ஶ்ரீராம நவமீ மற்றும் ராமர் ஜாதகம் பலன்கள்

ராம நவமி ஸ்பெஷல் !

ஸ்ரீ ராமர் ஜாதகத்தை வணங்குதல் புண்ணியத்திலும் புண்ணியம் !!

மகிமை வாய்ந்த இந்த ராமர் ஜாதகத்தை பூஜை இடத்தில் எழுந்தருளப்பண்ணி தினமும் பக்தி சிரத்தையுடன் ஆராதித்து வரவேண்டும். இந்தப் புனிதமான ராமர் ஜாதகத்தை பூஜிப்பவர்களுக்கும் வைத்திருப்பவர்களுக்கும் ஜாதகரீதியாக இருக்கும் நவக்கிரக தோஷங்கள் விலகுவதுடன் சகலவிதமான பிணிகளும் நீங்கும். மேலும் ஐஸ்வரிய அபிவிருத்தியும் ஆயுள் அபிவிருத்தியும் ரகுகுல நாயகனின் அருளால் உண்டாகும்
கிரக தோஷங்கள் நீக்கும் ஸ்ரீ ராமர் ஜனன ஜாதகம்.இந்த ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து பூஜித்தால் கிரக தோஷ பீடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

ராமனும் ராமாயணமும்!

மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணம் ராம அவதாரம். ராமன் தன் அவதாரம் மூலம், உலகுக்கு உணர்த்தாத பொருளே இல்லை, உரைக்காத உண்மையில்லை. தந்தை சொல் கேட்டல், உடன்பிறப்பு ஒற்றுமை, தாய்க்குச் சிறந்த மகனாக இருத்தல், வாக்குத் தவறாமை, ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஏகபத்தினி விரதம் - இப்படி சொல்லிக் கொண்டே செல்லலாம்.
ஓர் இல், ஒரு சொல், ஒரு வில் என வாழ்ந்து வழிகாட்டியவர் ஸ்ரீராமர்.

ஓர் இல் - ஒரு மனைவி.
ஒரு சொல் - வாக்குத் தவறாமை.
ஒரு வில் - குறி தவறாத ராம சரம்.

ஸ்ரீ ராம ஜெயம் !!! மர்யாதா புருசோத்தமன் ஏகபத்னீ வ்ரதன் தசரத நந்தன் ஸ்ரீ இராமச்சந்திரன். ராமநாமமே தாரகமான தலை சிறந்த மந்திரம் காசியில் தகனம் செய்யப்படும் பிரேதத்தை  ஸ்ரீ காசி விஸ்வநாதர் தன் மடியிலிட்டு  தாய் விசாலாட்சி தன் முந்தானையால் விசிறி விட "ராம" நாமம் செல்லி தான் ஜீவமுக்தி தருகிறார். காசியில் ஸப்த ரிஷி பூஜா தீபாராதனை விஷ்வநாதருக்கு உன்டு அப்போது சமர்பிக்கப்படும் வில்வபத்ரத்தில் ஸ்ரீ ராம நாமம் எழுதி தான் ஸமர்பனம்.எனவே ஸ்ரீ ராம நவமியாம் ராம ஜனனோஸ்சவத்தில் ஸ்ரீ ராம நாமமாம் தாரக மந்திரத்தை சதா ஜபித்து(அட்சர லட்சம் ஜெபம் செய்து) வாயு புத்திரன் மாருதி ராயனின் அருளோடு ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் அருளை நாடுவோம்.

(காசியில் பிரேதங்களை எரியூட்ட (யதாஸ்தானம்  செய்ய எடுத்து வருகையிலும்  ஸ்ரீ ராம நாமம் தான் (ஸ்ரீ ராம் நாம் சத்யஹே).

தேசப்பிதாவின் ஸ்மரன நாமமும் ராம நாமம் தான் . (அவர் சென்ன கடைசி வார்த்தையும் இராம நாமம் தான்).

ஸ்ரீ வித்யா சம்ப்ரதாயத்திலும் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஸ்ரீ ராம சகோதரி.

ராமம ராம ராம ராம ராம ராம ராம ராம.ஜெய் ஸ்ரீராம்.

ஜானஹி காந்தஸ்மனம் ஜெய் ஜெய் ராம ராம.

Saturday, April 6, 2019

பாஜகவை நம்பிய மாவட்ட மக்கள் அடைந்து விட்டார்கள் நல்ல பலன்களை

கன்னியாகுமரி மக்களுக்கு பொன் ராதாகிருஷ்ணன் செய்த சிறந்த சாதனைகள் பட்டியல்...

01. 28000 கோடியில்
      சர்வதேச துறைமுகம்
      துவங்கப்பட்டது.

02. 10000 கோடியில்
       கிழக்கு கடற்கரை
       சாலை அமைத்தல்.

03. 4000 கோடியில்
      இரட்டை ரயில்
      பாதை வேலைகள்
      நடந்து
      கொண்டிருக்கிறது.

04. மதுரை -
       நாகர்கோவில்
       இரட்டை ரயில்
       பாதை.

05. கன்னியாகுமரி -
       திருவனந்தபுரம்
       இரட்டை ரயில்
       பாதை.

06. 4000 கோடியில்
       நான்கு வழி
       சாலைகள்.

07. கன்னியாகுமரி -
       திருவனந்தபுரம்
      புதிய நான்குவழி
      சாலை.

08. நாகர்கோவில் -
       காவல்கிணறு
       புதிய நான்குவழி
       சாலை.

09. 307 கோடியில்
       மார்த்தாண்டம்
       மற்றும்
       பார்வதிபுரம்
       மேம்பாலங்கள்.

10. 200 கோடியில் நரிக்
      குளம் பாலம் கட்ட
      பட்டு தே‌சிய
      நெடுஞ்சாலை
      விரிவாக்கம்
      செய்யப்பட்டது.

11. 200 கோடியில்
      கன்னியாகுமரி
      மருத்துவக் கல்லூரி
      மற்றும் பல்நோக்கு
      மருத்துவமனை.

12. 102 கோடியில இ.எஸ்.ஐ
      மருத்துவமனை.

13.  பசுமை விமான
       நிலையம் (Greenfield
       Airport) தொடங்க
       உள்ளது.

14. Nagercoil -லில் பு‌திய
       Bus port தி‌ட்ட‌ம்.

15. ஒழுகின சேரி,
      கோட்டார்,
      Thuckalay மற்றும்
      களியக்காவிளை
      ஆகிய இடங்களில்
      மேம்பாலம் திட்டம்

16. 07 கோடியில்
       Suchindrum
       மேம்பாலம்
       கட்டுமானம்

17. நாகர்கோவிலில்
       passport office
       செயல்பாடு.

18. Construction of
       Suchindrum Bypass
       Road

19. Kuzhithurai புதிய
       மாற்று பாலம்
       அமைக்கப்பட்டது.

20. திருநெல்வேலி -
       தாம்பரம்
       அந்தியோக்கியா
       தினசரி ரயில்
       நாகர்கோவில் வரை
       நீட்டிப்பு .

21. திருச்சி -
       திருநெல்வேலி
       இன்டர்சிட்டி ரயில்
       நாகர்கோவில்
       வழியாக
      திருவனந்தபுரம்
      வரை நீட்டிப்பு .

22. நாகர்கோவில் -
      தாம்பரம் வாரம்
      மூன்று முறை புதிய
      அதிவிரைவு ரயில் .

23. Nagercoil நகராட்சி
      Corporation ஆக தரம்
      உயர்த்தப்பட்டது.

24. மாவட்டம் முழுவதும்
      150 சாலைகள்
      செப்பனிடும் வேலை
      முடிக்கப்பட்டது.

# சிலவற்றை குமரி மக்களுக்கு நினைவு படுத்துவோம்...

மத்திய அமைச்சர் மாண்புமிகு பொன் இராதாகிருஷ்ணன் அவர்கள் 14.05.2015 அன்று மத்திய சாலை நிதியில் இருந்து நிதி ஒதிக்கீடு செய்து 2015-ஆம் ஆண்டு பணி துவக்கப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள குமரி மாவட்டத்தில் உள்ள
மாநில சாலைகள் விபரம் ....!!!!

இவை பொன்னாரின் பெரும் முயற்சியால் குமரி மாவட்ட மக்களுக்கு
கிடைக்க பெற்றது ...

1) ஆரல்வாய்மொழி – நெடுமங்காடு சாலை சீரமைக்க - 9 கோடி 20 லட்சம்

2) குளச்சல் – திருவட்டார் சாலை சீரமைக்க - 9 கோடி 70 லட்சம்

3) அஞ்சுகிராமம் தேசிய நெடுஞ்சாலை (NH-7) செப்பனிட்டு சீரமைக்க - 2 கோடி

4) குழித்துறை – ஆலஞ்சோலை – ஆறுகாணி சாலை சீரமைக்க - 4 கோடி 80 லட்சம்

5) அஞ்சுகிராமம் சாலை சீரமைக்க - 5 கோடி

6) இரணியல் – ராஜாக்கமங்கலம் சாலை சீரமைக்க - 1 கோடி 95 லட்சம்

7) தக்கலை – தடிக்காரன்கோணம் சாலை சீரமைக்க - 3 கோடி 20 லட்சம்

8) கோட்டார் – மணக்குடி சாலை சீரமைக்க - 2 கோடி 15 லட்சம்

9) தர்மபுரம் சாலை சீரமைக்க - 1 கோடி 65 லட்சம்

10) மார்த்தாண்டம் – கருங்கல் சாலை சீரமைக்க - 1 கோடி 70 லட்சம்

11) சுவாமியார்மடம் – மேக்கோடு சாலை சீரமைக்க - 3 கோடி 20 லட்சம்

12) தெரிசனம்கோப்பு – சுருளக்கோடு சாலை சீரமைக்க - 3 கோடி 80 லட்சம்

13) குழித்துறை – தேங்காப்பட்டினம் சாலை சீரமைக்க - 4 கோடி

14) பாறசாலை – பனச்சமூடு சாலை சீரமைக்க - 1 கோடி 10 லட்சம்

15) இரணியல் – தக்கலை சாலை சீரமைக்க - 2 கோடி 15 லட்சம்

16) இரணியல் – முட்டம் சாலை சீரமைக்க - 2 கோடி 80 லட்சம்

17) சாந்தபுரம் சாலை சீரமைக்க - 2 கோடி 70 லட்சம்

18) முளகுமூடு – குளச்சல் சாலை சீரமைக்க - 3 கோடி 10 லட்சம்

19) மேக்கோடு – குலசேகரம் சாலை சீரமைக்க - 2 கோடி 40 லட்சம்

20) லெட்சுமிபுரம் – மண்டைக்காடு சாலை சீரமைக்க - 1 கோடி 48 லட்சம்

21) இரவிபுதூர்கடை – கருங்கல் சாலை சீரமைக்க - 2 கோடி 10 லட்சம்

22) குமாரபுரம் சாலை அகலப்படுத்தி சீரமைக்க - 3 கோடி 20 லட்சம்

23) மாங்குழி சாலை சீரமைக்க - 2 கோடி 20 லட்சம்

24) கேரளாபுரம் – குழிக்கோடு சாலை சீரமைக்க - 2 கோடி 20 லட்சம்

25) மாங்காடு சாலை சீரமைக்க - 2 கோடி 10 லட்சம்

26) பெருவிளை சாலை சீரமைக்க - 73 லட்சம்

27) கோட்டார் – மணக்குடி சாலை முதல் கீழக்காட்டுவிளை சாலை வரை சீரமைக்க - 38 லட்சம்

28) ஆரல்வாய்மொழி – நாகர்கோவில் – ராஜாக்கமங்கலம் – குளச்சல் சாலை – ஆசாரிபள்ளம் – சாந்தபுரம் சாலை (வழி) – அனந்தநாடார்குடியிருப்பு சாலை சீரமைக்க - 64 லட்சம்

29) கொட்டாரம் – அகஸ்தீஸ்வரம் சாலை முதல் சமாதானபுரம் சாலை வரை சீரமைக்க - 1 கோடி 20 லட்சம்

30) பொட்டல்குளம் – அழகப்பபுரம் சாலை சீரமைக்க - 80 லட்சம்

31) வேம்பத்தூர் ஹரிஜன் காலனி சாலை மற்றும் பீமநகரி ஹரிஜன் காலனி சாலை சீரமைக்க - 1 கோடி 30 லட்சம்

32) குமாரகோவில் சாலை சீரமைக்க - 1 கோடி 33 லட்சம்

33) ஆழ்வார்கோவில் சாலை சீரமைக்க - 70 லட்சம்

34) இரணியல் சத்திரம் – கல்குறிச்சி சாலை சீரமைக்க - 90 லட்சம்

35) முட்டம் – கடியப்பட்டினம் – மணவாளக்குறிச்சி சாலை சீரமைக்க - 1 கோடி 10 லட்சம்

36) முளகுமூடு – குளச்சல் சாலை முதல் கருக்கன்குழி சாலை வரை சீரமைக்க - 25 லட்சம்

37) மணலிக்கரை கிளை சாலை சீரமைக்க - 60 லட்சம்

38) குலசேகரம் – திருவரம்பு சாலை சீரமைக்க - 1 கோடி 70 லட்சம்

39) மருதன்கோடு சாலை சீரமைக்க - 1 கோடி 80 லட்சம்

40) மேலாங்கலம் சாலை சீரமைக்க - 75 லட்சம்

41) பெருஞ்சிலம்பு சாலை சீரமைக்க - 1 கோடி 75 லட்சம்

42) கள்ளியங்காடு சாலை சீரமைக்க - 1 கோடி 75 லட்சம்

43) தூவச்சி (Thoovachi) சாலை சீரமைக்க - 1 கோடி 86 லட்சம்

44) சறுக்கை (Charukkai) சாலை சீரமைக்க - 2 கோடி 10 லட்சம்

45) Suchindrum புறவழிச்சாலை- 24 கோடி 50 லட்சம்

46) கன்னியாகுமரி முதல் பழையஉச்சகடை 71.05KM-66 கோடி

47) பரசேரி திங்கள்சந்தை,புதுக்கடை சாலை - 22 கோடி

Etc. Etc. Etc.

மொத்தம் : ₹212 கோடி 30 லட்சம்... (only for small road works) 

இன்னும் எத்தனையோ நலத்திட்டங்கள் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில்...

தமிழக வரலாற்றில் எதாவது ஒரு பாராளு மன்ற உறுப்பினர் தங்கள் தொகுதிக்கு இப்படி செய்த வரலாறு உண்டா....

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பா. ஜ. க வேட்பாளராக இப்போது மீண்டும் களத்தில் இறங்கி இருக்கிறார்.

பொன் ராதாகிருஷ்ணன்
👍👍👍