Saturday, March 9, 2019

காரடையான் நோன்பு சிறப்பு பதிவு

மார்ச் 15 பங்குனி 1        2019 வெள்ளி

காரடையான் நோன்பு

கே. ஈஸ்வரலிங்கம்

சகல சௌபாக்கியத்தை தரும் துளசி வழிபாடு
காரடையான் நோன்பு
இந்த நோன்பு மாசியும் - பங்குனியும் சேரும் நேரத்தில் கொண்டாடப்படு கின்றது.
காரடையான் நோன்பு எதற்கு கொண்டாடுகின்றோம் என்பதை அறிவோமா?
காதல் அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறது. ஆனால் அது மிகப் புனிதமான ஒன்றாகவும் சுயநலமில்லாததாகவும் இருந்தது. அது இதயத்தினில் கலந்துவிட்ட ஒன்று சாவித்திரி ஒரு ராஜகுமாரி தந்தை அசுவபதி... ஒரு நாள் தன் தோழிகளுடன் வனத்திற்குச் சென்றாள்.
அழகான நீர் வீழ்ச்சியைக் கண்டுமனம் பரவசம் அடைந்தாள். கூடவே ஒரு சுந்தரமுகமும் தெரிய ஆவலுடன் அந்தத் திசையில் நோக்கினாள். ஒரு அழகான வாலிபன் அவள் மனதைக் கொள்ளைக் கொண்டான்.
அந்த நிமிடமே அவனே தன் புருஷன் என்று தீர்மானமும் கொண்டாள். மாளிகைக்குத் திரும்பி வந்து தன் தந்தையிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தாள். அந்தச் சமயம் “நாராயணா நாராயணா” என்றபடியே நாரதர் நுழைந்து பின் விவரம் அறிந்து அந்த வாலிபன் “சத்தியவான்” எனவும் அவன் இன்னும் ஒரு வருடத்தில் மரணம் அடைவான் என்றும் குறிப்பிட்டு பின் எச்சரிக்கிறார் சாவித்திரி.
இதில் மிக உறுதியாக இருந்ததால் அரசர் தன் மகளைச் சத்யவானுக்குத் திருமணம் செய்துக்கொடுத்தார். அரண்மனை வாசம் போய் காட்டின் அருகில் ஒரு சின்ன வீடு.. மாளிகை விட்டு வந்த சாவித்திரி அதிலும் இன்பத்தைக் கண்டாள் தன் புருஷனின் உயிரைக்காக்க பார்வதி செய்த விரதத்தை மேற்கொண்டாள். அங்குக் கிடைத்த நெல்லிருந்து அரிசியைப் பொடியாக்கி அதில் காராமணியும் சேர்த்து அடைப்போல் தட்டி வெண்ணெயுடன் நைவேத்தியம் செய்தாள். பின் மஞ்சள் சரடை சுமங்கலியாக இருக்கப் பிராத்தித்து கட்டிக்கொண்டாள்.
அந்த நாளும் வந்தது சத்தியவன் விறகு வெட்டும்போது பாம்பின் ரூபமாக யமன் வந்தான். அவனைக் கொட்டினான். தள்ளாடியபடியே அவன் கீழே சாய சாவித்திரி அவனைத் தாங்கிப் பிடித்தாள்.
கற்பின் சக்தியால் யமனும் அவள் கண்ணில் பட்டான் அவன் உயிரைக் கொடுக்கும்படி வாதித்தாள் கதறி அழுதாள் பின் தொடர்ந்தாள். அவள் கண்ணீர் அவன் மனதை நெகிழ வைத்தது.
சாவித்திரி நான் என் கடமையைத் தான் செய்கிறேன். அவன் உயிரைத் தவிர வேறு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன்’ என்றான்.
‘யமராஜனே என் வம்சம் வாழையடியாகத் தழைத்து வளரவேண்டும்”
“சரி அப்படியே ஆகட்டும் தந்தோ¡ம்” என்று சற்றும் யோசிக்காமல் வரம் வழங்கினான்.
“உங்கள் வரம்படி சத்தியவான் இல்லாமல் குலம் எப்படித் தழைத்து ஓங்க முடியும்” என்று பதிலுக்கு சாவித்திரி கேட்க வேறு வழியில்லாமல் யமதர்மராஜன் சத்தியவானின் உயிரைத் திரும்பிக் கொடுத்தான்.
சாவித்திரியின் பக்தியும் அன்பும் கற்பும் யமனையும¨ வென்று தன் புருஷனை மீள வைத்தன.
இந்தக் கதை சாதாரணமாக எல்லோருக்கும் தெரியும். இதுபோல ஒன்றை வடநாட்டில் கரவாசெளத் என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். காலையிலிருந்து தண்ணீர் கூடக் குடிக்காமல் இரவில் சந்திரனைப் பார்த்தப் பின்னர் தான் சாப்பிட்டு விரதத்தை முடிக்கிறார்கள். என் மருமகள் வட நாட்டில் இருந்து பழக்கப்பட்டதால் அந்த நோன்பும் செய்ய என் மகனும் அன்று முழுவதும் பட்டினி கிடப்பான். பெண்களுக்குத் தானா புருஷன் முக்கியம் ஆண்களுக்கும் இதே உணர்வு உண்டே என்று சொல்லும்போது இதுபோல் ஆண்களுக்கும் ஏதாவது விரதம் இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆனால் அந்த நோன்பு தீபாவளிக்குப் பின் வரும் என்ற ஞாபகம்.
நம் நோன்பு மாசி மாதம் பங்குனி மாதம் கூடும் நேரத்தில் வரும் ‘மாசிக்கயிறு பாசிப்படியும்’ என்று சொல்வார்கள் ஆகையால் மாசி முடியும் தருவாயிலேயே இதை அனுஷ்டித்துவிடுவது வழக்கம்.
அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக்கொள்வார்கள். “மாசிக்கயிறு பாசி படியும்” என்று பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக்கொள்வது விசேடமானதாகக் கருதப்படுகிறது.
இந்த நோன்பு செய்யும்போது கீழ் வரும் ஸ்லோகத்தை சொல்லவும்.
‘உருக்காத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன் அதாவது’ உருகாத வெண்ணையுக் ஓரடையும் நான் வைக்க என் கணவன் என்னைவிட்டு என்றும் பிரியாமல் இருக்கவேணும்’
(நூற்றேன் என்பதற்கு தருவேன் என்று சொல்வது உண்டு)
என்று சொல்லியடியே சரடை
அணிந்துக்கொள்வார்கள்.
எல்லாமே உலகத்தில் அன்பும் பாசத்திற்கும்
கட்டுப்பட்டு உறவுகள்
பின்னப்படுகின்றன.. இந்தக் காலத்தில் தாலிக்கு
இத்தனை மதிப்பு
கொடுக்கப்படுகிறதா? அல்லது இரு மனம் ஒருமனம்
ஆனாலே போதும் என்று நினைக்கப்படுகிறதா? விஜய்
டிவியில் ‘நீயா நானா’ வில் இதுவும்
அலசப்பட்டுவிட்டது.
மிகவும் அழகான விரதம் இது. கடைக்கண் பார்வையில் காதலும் உள்ளத்தில் பக்தியும், பக்தியில் சிரத்தையும் கூடி செய்யும் விரதம் அன்று மட்டுமல்லாது, வாழ்க்கை முழுவதும் இந்த சுலபமான ஸ்லோகத்தை சொல்லலாம். ஆண்களும் தான்.
மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப் பிரதே மக்களார்த்தம் ம்ங்களேசி மாங்கல்யம் தேஹி மே ஸதா!

No comments:

Post a Comment