Saturday, February 16, 2019

நாஸ்திகவாதம் என்ற பெயரில் ஹிந்து மதத்தை அழிக்க வருஷாவருஷம் 30 கோடி ரூபாய் பெறும் இயக்கங்கள்

சித்தர்கள் அருளிய சிவாலய வழிபாட்டு முறை!

உலகத்தில் மனிதப் பிறவி எடுத்துள்ள நாம் ஈசனின் கருணையால் தான் இந்த அளவுக்காவது வாழ்ந்து வருகின்றோம்;நமது 7 வயது வரை நமது முற்பிறவி ஞாபகம் முழுமையாக இருக்கும்;ஆனால்,அதை பிறருக்கு விவரிக்கமுடியாது;7 வயதிற்குப் பிறகு அனைத்தும் மறந்துவிடும்;

1964 முதல் நாத்திகப் பிரச்சாரத்தினால்,அதை எதிர்த்துப் போராடுவதிலேயே நமது சக்தி செலவழிந்துபோனது;முத்தமிழை வித்தவர் அதில் செய்த தந்திரத்தை நம்மில் பலர் இன்னும் உணரவில்லை;

நாத்திகப் பிரச்சாரத்தை நமது இந்து தர்மத்திற்கு எதிராக மட்டுமே செய்தார்கள்;அதன் மூலமாக,நமது தெய்வ நம்பிக்கை தகர்க்கப்பட்டது;

பள்ளிக் கல்வி,கல்லூரிக் கல்வியில் இருந்து இந்து தர்மத்தின் நீதி போதனைப் பாடங்கள் நீக்கப்பட்டன;ஆழ்வார்களும்,நாயன்மார்களும் வாழ்ந்த ஆன்மீகத் தமிழ்நாடு மதமாற்ற பயங்கரவாதத்தினால் பாதிப்புக்கு உள்ளாகத் துவங்கியது;

நாத்திகப்பிரச்சாரத்தினால் அதிர்ச்சி அடைந்த இந்து தமிழ்நாடு,1964 முதல் 1984 வரை குழப்பத்தில் தான் இருந்தது;இந்து முன்னணி என்ற இயக்கம் உருவானப் பின்னரே,எப்படி நாத்திகவாதிகளை எதிர்ப்பது? என்ற கண்ணோட்டம் இந்து முன்னணியால் தான் உருவாக்கப்பட்டது;

1964 முதல் 1998 வரை நாத்திகப் பிரச்சாரம் செய்ய சென்னையில் இருக்கும் இங்கிலாந்து தூதரகம் மாதா மாதம் பணம் நேரடியாக நாத்திக இயக்கங்கள்,நாத்திகக் கட்சிகளுக்கு வழங்கப்பட்டது;

நாத்திக இயக்கம் இன்று வரை ஒரு ஆண்டுக்கு ரூ.30,00,00,000/- தொகையை ஐரோப்பாவில் இருந்து பெற்றுக் கொண்டு இருக்கின்றது;தமிழ்நாட்டில் நாத்திக இயக்கத்திற்கு இருக்கும் சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.1,00,000 கோடிகள் ஆகும்;

நாத்திகத்தை முன்னாடி வைத்துக் கொண்டு,அதன் பின்னால் பாதிரிகளை உருவாக்கி மதமாற்றத்தை சொகுசாக 1964 முதல் 1998 வரை நடத்தி வந்தார்கள்;

பள்ளிக்கல்வியில் இருந்து இந்துதர்மத்தின் நீதிபோதனைகள் நீக்கப்பட்டதால்,பண்பாடே தெரியாத சமுதாயம் 1964 முதல் உருவாகிக் கொண்டு இருக்கின்றது;

தமிழ்நாடு முழுவதும் 45,000 ஆலயங்கள் இருக்கின்றன;இதில் தஞ்சாவூர்,கும்பகோணம்,மயிலாடுதுறை என்ற மாயவரம் பகுதியில்  மட்டும் பிரபலம் ஆகாத கோவில்களின் மொத்த எண்ணிக்கை 50,000 ஆகும்;இவைகளில்,பல ஒரு நேர பூஜைக்கு கூட வழி இல்லாமல் இருக்கின்றன;இந்துக்களாகிய நாம் பணம் சம்பாதிப்பதற்கே போராடிக் கொண்டு இருக்கின்றோம்;நாத்திகப் பிரச்சாரம்+கம்யூனிஸக் கட்சிகளின் மதச்சார்பின்மை வியூகம்+ஜாதிக்கட்சிகளின் அசுர வளர்ச்சி= தெய்வ நம்பிக்கை இன்மையே தமிழ்நாடு முழுவதும் பரவலாகி விட்டது;

ஒவ்வொரு சிவாலயத்தின் வெளிப்பகுதியிலும் குளம் ஒன்று உண்டு;அதில் குளித்த பின்னரே அந்த கோவிலுக்குள் நுழைய வேண்டும் என்பது நமது பாரம்பரியம் ஆகும்;அந்த குளத்தில் இருக்கும் நீரில் சில பல தெய்வீக சக்திகள் இருக்கும்;அதில் குளிப்பதன் மூலமாக அந்த தெய்வீக சக்திகள் நமது உடலுக்குள் செல்லும்;அதனால்,அந்த கோவிலுக்குள் இருக்கும் தெய்வத்தின் அருளாற்றலும் சுலபமாக கிடைத்துவிடும்;

ஜனத்தொகை அதிகரித்துவிட்டதாலும்,பொதுமக்கள் பொறுப்பாக நடந்து கொள்ளாததாலும் கோவில் குளங்களில் குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது;எனவே.அந்த குளத்தின் நீரை தலையில் தெளிப்பது அவசியம்,

(சுத்தமாக இருப்பின்)அந்த குளத்தின் நீரை சில துளிகள் அருந்தவும் செய்யலாம்;
கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியேறும் வரை செல்போனை அணைத்து வைப்பது அவசியம்;கோவிலுக்குள் எக்காரணம் கொண்டும் செல்போன் பேச்சினை தவிர்க்க வேண்டும்;

கொடிமரத்திற்கும்,பலிபீடத்திற்கும் இடையே உள்ள இடைவெளிப்பகுதியில் விழுந்து கும்பிட வேண்டும்;அப்போது எனது மனதில் இதுவரை இருந்து வந்த எல்லாவிதமான வக்கிர எண்ணங்களையும் இங்கே பலியிடுகின்றேன் என்று எண்ணியவாறு விழுந்து கும்பிடவேண்டும்;

அதன் பிறகு,பிரதான மண்டபத்திற்குள் நுழைந்ததும்,ஒரு புறம் மேற்கு நோக்கியவாறு சூரியனும்,இன்னொரு புறம் சந்திரனும் இருப்பதை உணரலாம்;அவர்களை கைஎடுத்து கும்பிட்டுவிட்டு நந்தி பகவானுக்கு முன்னால் சென்று நிற்க வேண்டும்;

நந்தி பகவானை கைகூப்பி வணங்கிய படி, “ எனது பெயர்----,நான் ---- ஊரில் இருந்து வருகின்றேன்; இங்கே அருள் பாலித்து வரும் ----(மூலவரின் பெயர்) அவர்களை (பாசமாக பெயருக்கு முன்னால் அப்பா என்றும் கூறலாம்) தரிசிக்க வந்திருக்கின்றேன்;தாங்கள் தான் அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்;”

பிறகு,மூலவர் இருக்கும் இடத்தின் வெளிப்பக்கம் இருக்கும் துவார பாலகரின் முன்பாக நிற்க வேண்டும்;இரண்டு துவார பாலகர்களில் யாராவது ஒருவர் முன்பாக வேண்டிக் கொண்டால் போதும்;

சில சிவாலயங்களில் துவார பாலகர்களாக விநாயகர் ஒரு புறமும்,முருகக் கடவுள் இன்னொரு புறமும் இருப்பதைக் காணலாம்;

மூலவராக இருக்கும் சிவலிங்கத்திடம் நாம் எதையும் வேண்டிக் கொள்ளக் கூடாது;இங்கே இருக்கும் துவாரபாலகர்களிடம் பின்வருமாறு வேண்டிக் கொள்ள வேண்டும்;அப்படி வேண்டினால் தான்,அன்று இரவு 3 மணி அளவில் துவாரபாலகர் உள்ளே இருக்கும் சிவலிங்கத்திடம் நமது வேண்டுதலை முறைப்படி தெரிவிப்பார்;

“ஐயா,வணக்கம்,எனது பெயர்---,நான்--- ஊரில் இருந்து வருகின்றேன்.உள்ளே இருக்கும் அருள்மிகு-----------சுவாமியிடம் சில வரங்கள் கேட்டு வந்திருக்கின்றேன்;கடந்த 5 ஆண்டுகளாக எனக்கு ரூ.20,00,000 கடன் இருக்கின்றது;அது இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நான் அடைத்துவிட வேண்டும்;அதற்கு அருள்மிகு-------சுவாமியின் அருள் வேண்டும்” என்று வேண்டிக் கொள்ள வேண்டும்;

ஒரே சமயத்தில் எத்தனை கோரிக்கைகள் வேண்டுமானாலும் வைக்கலாம்;

அதன் பிறகு,உள்ளே மூலவரை தரிசிக்கச் செல்ல வேண்டும்;அங்கே அவரைப் பார்த்தவாறு ஓம் ரீங் சிவசிவ என்ற மந்திரத்தை ஜபிக்கலாம்;அல்லது சிவாய நம சிவாய நம என்றோ ஓம் அகத்தீசாய நமஹ;ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ ஜபிக்கலாம்;ஒரு முறை அருணாச்சலம் என்றோ அண்ணாமலை என்றோ சொன்னால்/ஜபித்தால் 3,00,00,000 முறை ஓம்நமச்சிவாய என்று ஜபித்தமைக்குச் சமம்;

அல்லது

மூலவரைப் பார்த்தவாறு ஓம் ரீங் (மூலவரின் பெயரை இரு முறை கூறலாம்).ஓம் ரீங் வைத்தியநாதா,வைத்தியநாதா என்பது ஒரு உதாரணம்;ஓம் ரீங் முல்லைவனநாதா;முல்லைவன நாதா என்பது இன்னொரு உதாரணம்;
தீபாராதனை பார்க்கும் போது நம்மில் பலர் கண்களை மூடிக் கொள்கின்றோம்;இது தவறு;இப்படிச் செய்யக் கூடாது;

தீபாரதனையை நமது கண்களால் பார்க்க வேண்டும்;அப்படிப் பார்க்கும் போது நமது கண்களுக்கு தீபாராதனை முதலிலும்,சிவலிங்கம் அதன் பின்னாலும் தெரியும்;அப்போது தான் நமது கோரிக்கைகளுக்கு ஏற்றவாறும்,நமது ஆத்ம பலத்திற்கு ஏற்றவாறும் சிவலிங்கத்தின் மீது சில உருவங்கள் தெரியும்;அல்லது தோற்றங்கள் தெரியும்;அல்லது மனதிற்குள் சிவலிங்கம் பதியும்;

இன்று பலர் கடனாளியாக இருப்பதற்குக் காரணம் நெற்றி முழுவதும் விபூதி தினமும் பூசாமல் இருப்பதே காரணம்!!!

இதே போல,அம்பாளின் சன்னதிக்கு எதிரே அமர்ந்த நிலையில் இருக்கும் நந்திபகவானிடமும் வேண்டிக் கொள்ள வேண்டும்;அதன் பிறகு,அம்பாள் சன்னதிக்கு வெளிப்பக்கத்தில் இருக்கும் துவாரபாலகிகளிடம் இதே போல நமது கோரிக்கைகளை வேண்டி கொள்ள வேண்டும்;

பிறகு,அம்பாள் சன்னதியை விட்டு வெளியே வரும் போது 63 நாயன்மார்களின் சன்னதி இருக்கும்;அவர்கள் ஒவ்வொருவர் முன்பாகவும் நின்றவாறு அவர்களை கையெடுத்து வணங்கியவாறு சிவமந்திரம் ஒன்றை ஜபிக்க வேண்டும்;அது ஓம் ரீங் சிவ சிவ என்றும் இருக்கலாம்;ஓம் நமச்சிவாய என்றும் இருக்கலாம்;சிவாய நம என்றும் இருக்கலாம்;சிவயசிவ என்றும் இருக்கலாம்;

3 கோடி முறை ஓம் நமச்சிவாய ஜபிப்பதற்கு நமக்கு இந்த பிறவியில் எத்தனை ஆண்டுகள் ஆகும்?
ஒரே ஒரு முறை அண்ணாமலை அல்லது அருணாச்சலம் என்று சொன்னாலும்,ஜபித்தாலும் அது 3 கோடி முறை ஓம் நமச்சிவாய என்று ஜபித்தமைக்குச் சமம் என்று அருணாச்சல புராணத்தில் அண்ணாமலையாரே உபதேசம் செய்திருக்கின்றார்;

நம் அனைவருக்கும் ஆதி மூல குரு அகத்தியர்! எனவே,ஓம் அகத்தீசாய நமஹ;ஓம் அருணாச்சலாய நமஹ என்றும் கூட ஜபிக்கலாம்;

கோவிலை வலம் வரும் போதும் இப்படி ஏதாவது ஒரு மந்திரத்தை ஜபித்தவாறு வலம் வர வேண்டும்;எக்காரணம் கொண்டும் பேசக் கூடாது;அழக் கூடாது;எந்த சன்னதியிலும் விழுந்து கும்பிடக் கூடாது;யாரையும் திட்டக் கூடாது;சபிக்கக் கூடாது;

மூலவருக்கு பின்னால்,லிங்கோத்பவர் சன்னதி இருக்கும்;அந்த லிங்கோத்பவருக்கு எதிர்ப்புறத்தில் இருக்கும் லிங்கத்தை சில நிமிடங்கள் வரை வேண்டிக் கொள்ள வேண்டும்;அதுதான் கலியுகத்தில் நமக்கு ஆழ்ந்த மன நிம்மதியைத் தரும் லிங்கம் ஆகும்;

தட்சிணாமூர்த்தியை தரிசிக்கும் போது,

கல்லாலின் புடை அமர்ந்து ஆறங்கமுதற் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்துகாட்டி
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்துபவத் தொடக்கை வெல்வாம்

என்று ஜபிக்கலாம்;அல்லது உங்களுக்குத் தெரிந்த தட்சிணாமூர்த்தி மந்திரங்கள்,துதிகளை ஜபிக்கலாம்;

சண்டிகேஸ்வரி சன்னதியில் கைதட்ட வேண்டும்;
சண்டிகேஸ்வரர் சன்னதியின் முன்பாகவும் கை தட்ட வேண்டும்;

சண்டிகேஸ்வரர் தான் சிவாலயத்திற்கு வருகை புரிந்தவர்களை மூலவரிடம் நள்ளிரவில் தெரிவிக்கும் வாத்தியார்! கை தட்டாமல் இருந்தால்,நாம் சிவாலயத்திற்கு வருகை புரிந்தது நமது கர்மவினை பராமரிப்பு கணக்கில் சேராது;

நடராஜர் சன்னதியின் முன்பாக சில நிமிடங்கள் நின்றவாறு சிவமந்திரம் ஒன்றை ஜபிக்க வேண்டும்;ப்ரபஞ்சத்தின் இயக்கத்தை ஆன்மீகரீதியாக விவரிக்கும் தெய்வீக வடிவமே நடராஜர் சன்னதி ஆகும்;

கண்டிப்பாக நவக்கிரக சன்னதியை ஒன்பது முறை வலம் வர வேண்டும்;இதன் மூலமாக,அன்றைய நாளில் நாம் செய்த அனைத்து கர்மவினைகளையும் நவக்கிரகங்கள் ஏற்றுக் கொண்டு நம்மை தூய ஆத்மாவாக மாற்றுகின்றன;

முடிவாக கால பைரவர் சன்னதியின் முன்பாக ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை 108 முறையாவது ஜபிக்க வேண்டும்;

கால பைரவரை ஜபித்து,வழிபட்ட பின்னர்,கோவிலை விட்டு வெளியேற வேண்டும்;வெளியேறும் போது ஈசனை வழிபடலாம்;மந்திரம் ஜபம் செய்யலாம்;ஆனால்,விநாயகரை இறுதியாக வழிபடக் கூடாது;

கோவில்களை எப்படி கட்டுவது என்பதைப் பற்றிய விளக்கங்களை சில்ப சாஸ்திரம்,ஆகமங்கள் தெரிவிக்கின்றன;இங்கே சாதாரண மனிதர்களுக்கு எப்படி சிவாலயத்தை வழிபடுவது என்பதை மட்டுமே தெரிவித்திருக்கின்றோம்;

தமிழ்நாட்டில் 45,000 ஆலயங்கள் இருக்கின்றன;அதில் சுமாராக 10,000 ஆலயங்கள் விஷ்ணு ஆலயங்கள் ஆகும்;
ஆகமவிதிப்படி சில சில மாறுதல்களோடு சிவாலயங்கள் கட்டப்பட்டு இருக்கின்றன;பொதுவான வழிபாட்டு முறையை இங்கே அகத்திய மகரிஷியின் பேரருளால் உங்களுக்குத் தெரிவித்து இருக்கின்றோம்;

பள்ளி,கல்லூரி பாடத்திட்டங்களில் பக்தியப்பற்றிய போதுமான பாடங்கள்  இல்லாமற் போனதால் தான் கடந்த 25 ஆண்டுகளாக நாத்திகம் பேசுபவர்கள் நமது கோவில்களில் மூலவர்,உற்சவர்,தெய்வீகத் தன்மைகள் நிரம்பிய தூண்கள் போன்றவைகளை திருடி ஐரோப்பாவுக்கு அனுப்பி இருக்கின்றார்கள்;இதன் மூலமாக நமது கோவில்களின் ஆன்ம பலத்தைச் சிதைக்கும் சதித்திட்டங்கள் கடந்த 300 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன;

இந்த தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு இந்துக் குழந்தைக்கும் நமது ஆலய வழிபாட்டின் பெருமைகளை 12 முதல் 22 வயதிற்குள் போதிப்பது நம் ஒவ்வொருடைய கடமையும் பொறுப்பும் ஆகும்;

இதைச் செய்யாவிட்டால்,இன்னும் 50 அல்லது 70 ஆண்டுகளில் (இன்று 2019 ) தமிழ்நாடு கிறிஸ்தவமயமாக வாய்ப்புகள் அதிகம்.. எச்சரிக்கை!!!
Visit
https://www.hindhu.news

No comments:

Post a Comment