Sunday, June 16, 2019

சுமங்கலி ப்ரார்தனை விளக்கம் -செய்முறை

சுமங்கலி பிரார்த்தனை  /  sumangali prarthanai
பெண்கள் கட்டாயம் படியுங்கள் / நல்ல தகவல்
மேல தெரு ஸ்ரீனிவாச சாஸ்திரி ஆத்துல
ஸுமங்கலிப் பிரார்த்தனை....
காஸ்யபதி சாஸ்திரிகள் தான் பண்ணி வெச்சார்...
அப்படியே இதை பத்தி சொல்லவும் ஆரம்பிச்சார்...
“ஸுமங்கலீரியம் வதூரிமாம் ஸமேத பச்யத |
ஸௌபாக்யமஸ்யை தத்வா யா தாஸ்தம் விபரேதன ||”
என்கிற வேத மந்த்ர ஆசீர்வாதத்தில் க்ருஹிணீயான கல்யாணமான பெண்ணிற்கு ஸுமங்கலி எனும் அந்தஸ்தையும் அனைத்து ஸௌபாக்யங்களை (மங்கலங்களை)யும் கொடுக்குமாறு தேவர்களைப் ப்ரார்த்திக்கிறது.
நம் ஸனாதன வைதிக தர்மத்தின் ஆதாரமான வேதங்களும், சாஸ்த்ரங்களும் ஆண்களுக்குப் பல்வேறு கர்மாக்களையும், பெண்களுக்கு பற்பல வ்ரதங்களையும் அனுஷ்டிக்கும்படி வற்புறுத்துகின்றன.
அநேக விதமான, க்ரஹ்ய ஸூத்ரங்களும், ப்ரயோக க்ரந்தங்களும் வ்ரத சூடாமணி, வ்ரத கல்ப மஞ்ஜரீ, வ்ரத பூஜா விதானம் முதலிய நூல்களும் கர்மாக்களின், வ்ரதங்களின் செய்யும் முறைகளை விரிவாக விளக்குகின்றன.
இவை தவிர நாம் பல பண்டிகைகளையும் கொண்டாடுகிறோம்.
“ஸுமங்கலி ப்ரார்த்தனை” வைதிக கர்மா இல்லை; வ்ரதமுமன்று; பண்டிகையுமில்லை.
பின் எவ்வாறு அழைக்கலாம்? நீங்களே ஒரு பெயர் சூட்டலாமே! பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் பெண்களின் ஸமாராதனை (ஒரு விசேஷமான விசேஷம்) அவ்வளவே.
வருடம் தோறும் நடத்த வேண்டுமென்பதில்லை. நம் வீடுகளில் கல்யாணம் போன்ற ஸுப கார்யங்கள் நடக்கும்போது, அந்தந்த விசேஷங்களை ஒட்டி, முன்னரோ பின்னரோ இந்த ஸுமங்கலிப் ப்ரார்த்தனையைச் செய்ய வேண்டும். வீட்டில் பெரியவர்களைக் கலந்து ஆலோசித்து அவர்கள் சொற்படி ச்ரத்தையுடனும் ஆசாரத்துடனும் நல்ல முறையில் செய்ய வேண்டும். தேசத்துக்குத் தேசம், மாவட்டத்திற்கு மாவட்டம், ஊருக்கு ஊர், வீட்டுக்கு வீடு, குலத்துக்குக் குலம் ஸம்ப்ரதாயங்கள், நடைமுறைகள் மாறுபடும்.
நம்மில் உட்பிரிவுகளுக்கிடையேயும் (வடமா, பிரஹசரணம், அஷ்டஸஹஸ்ரர், ஸங்கேதி முதலியன) பழக்க வழக்கங்கள் வேறுபடும்.
ஸுமங்கலிப் ப்ரார்த்தனையை நல்ல நாள் பார்த்துச் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமையில் செய்வது விசேஷம். திங்கள் அல்லது புதன் கிழமைகளிலும் செய்யலாம்.
கரிநாள், கிரஹணம், அமாவாசை மற்றும் தர்ப்பண தினங்களில் கூடாது. க்ருஹ வாத்யாரிடம் கேட்டு நாள் குறிக்கவும்.
ஒரு வருஷத்தில் ஒரு குடும்பத்தில் ஒரு முறைதான் செய்ய வேண்டும். விவாஹத்திற்கு முன் செய்ய நாள் வாய்க்காவிடில் திருமணத்திற்குப் பின் நாட்டுப் பெண் வந்ததும் நாள் பார்த்துச் செய்யலாம். அதே போல் பெண் வீட்டில் புக்ககத்திலிருந்து பெண்ணை அழைத்து வந்தும் செய்யலாம்.
ஸுமங்கலிப் ப்ரார்த்தனை செய்ய நாள் பார்த்துத் தீர்மானித்தவுடன்,
அதற்கு ஓரிரு நாள் முன்பே 9 கஜம் புடவையும், ரவிக்கைத் துணியும், சித்தாடையும் (3 கஜம்) புதிதாக வாங்க வேண்டும். புடவை கறுப்பு, கருநீலம், கரும்பச்சை நிறங்களில் இருக்கக் கூடாது. நூல் புடவை (உறையூர், தேவேந்த்ரா, சுங்கடி) சாலச் சிறந்தது. சித்தாடையும் கருநிறமின்றி சீட்டித் துணியில் எடுக்கலாம்.
(நீண்ட நாட்கள் முன்பு வேறு ஏதாவது விசேஷத்திற்கு வாங்கிய புடவையோ, யாராவது வெற்றிலை பாக்கில் வைத்துக் கொடுத்த புடவையோ கூடாது).
ஸுமங்கலி ப்ரார்த்தனையில் போஜனத்திற்கு உட்காரும் ஸுமங்கலிப் பெண்கள்/மாமிகள் ஆகியோருக்குக் கொடுக்க வேண்டிய ரவிக்கைத் துணிகளையும் கறுப்பு நூல் கலக்காததாக வாங்க வேண்டும்.
மேலும் வெற்றிலைப் பாக்குடன் கொடுப்பதற்கு பழம், தேங்காய், குங்குமம், மஞ்சள், சீப்பு, கண்ணாடி, மல்லிச்சரம் போன்றவற்றையும் வாங்கித் தயாராக வைத்திருக்க வேண்டும்.
ஸுமங்கலிப் ப்ரார்த்தனையில் போஜனம் செய்ய முறைப்படி அழைக்கப்படும் ஸுமங்கலிப் பெண்கள் (”பெண்டுகள்” எனப்படுவர்) 5, 7 அல்லது 9 என்ற ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும். கன்யாப் பெண் இருவரையும் சேர்த்து எண்ணி ஒற்றைப்படையில் வருமாறு இலைகளைப் போட வேண்டும். கன்யாப் பெண் என்பவள் 3 வயதுக்கு மேற்பட்ட ருதுவாகாத இலையில் தானாகவே சாப்பிடக்கூடிய பக்குவம் உள்ள பெண்ணாக இருக்க வேண்டும்).
ருதுவான பெண் கன்யாப் பெண் இல்லாவிடினும் நம் வீட்டுப் பெண்ணிற்குத் திருமணம் என்றால் அந்தப் பெண்ணைக் கன்யாப் பெண்ணாக பாவிக்கலாம்). நாட்டுப் பெண்கள், ஓரகத்திகள் பெண்டுகளாக உட்காருவதில்லை. மூன்று மாதத்திற்கு மேல் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பெண்டுகளாக இருக்கக் கூடாது. ஒரு வீட்டில் மரணம் நிகழ்ந்திருந்தால் இறந்தவருடைய நெருங்கிய உறவினர்களை ஒரு வருடத்திற்கு பெண்டுகளாகவிருக்கும் வழக்கமில்லை.
குடும்ப வழக்கப்படி, முதல் நாள் மாலை ஸுமங்கலிப் பெண்டுகளை அவர்கள் வீட்டிற்குச் சென்று குங்குமம், எண்ணெய், சீயக்காய், மஞ்சள் கொடுத்து விட்டு மறுநாள் போஜனத்துக்கு வரச் சொல்லி அழைக்கவும். சில இடங்களில் விசேஷ தினத்தன்று காலை எண்ணெய் நைவேத்யம் செய்து பின் மங்கலப் பொருள்களைக் கொடுத்து அழைக்கும் பழக்கமும் உள்ளது. அன்று நேரம் உள்ளவர்கள் அவ்வாறு செய்யலாம்.
ஸுமங்கலி ப்ரார்த்தனை நடக்கும் நாள் காலை வீட்டை மெழுகி வாசல் தெளித்துக் கோலம் போட வேண்டும்.
புதிய புடவையை மட்டும் நனைத்து கிழக்கு மேற்காக உலர்த்திக் காய்ந்த பின் கொசுவமாகச் சுற்றி ரவிக்கைத் துணியுடன் கோலமிட்ட பலகையில் வைத்து அதன்மீது முகம் பார்க்கும் கண்ணாடி, புஷ்பம், மங்கலப் பொருள்கள் ஆகியவற்றை வைக்கவும்.
சில வீடுகளில் பூவாடாப் பானை (பூவாடாப் பானை, பூவோடுபானை)யில் புடவை வைக்கும் வழக்கம் உண்டு. இது ஒரு மூடியுடன் கூடிய வெங்கலப் பானை, புடவைக் கலம் கிழக்கு நோக்கி அமரும்படி இருக்க வேண்டும். மற்ற பெண்டுகளின் இலைகள் வடக்கு அல்லது மேற்குப் பார்த்து அமரும்படி இருக்க வேண்டும்.
ஒரே அறையில தான் எல்லா இலைகளும் இருக்க வேண்டும். இலைகளின் நுனி உட்காருபவரின் இடது கைப்பக்கம் இருக்க வேண்டும்.
சமையல் விவரம்: குடும்பத்தில் பரம்பரையாக நிலவும் வழக்கப்படி சமையல் செய்யலாம். சில வீடுகளில் மிளகு சமையல் வழக்கமாக உள்ளது. சிலர் ஸமாராதனை சமையல் செய்வர். மிளகாய்ப்பழம், மல்லிவிதை, கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு சேர்க்கலாம். பெருங்காயம் சேர்க்கக் கூடாது. மோர்க் குழம்பும், மிளகு ரஸமும் வைக்க வேண்டும். வெல்லப் பாயஸம், இஞ்சி கறிவேப்பிலைத் துவையல் செய்ய வேண்டும். பக்ஷணமாக வடை, அப்பம், எள்ளுருண்டை செய்யலாம். ஸுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு சமையல் நம் க்ருஹத்தில்தான் செய்ய வேண்டும். வெளியிலிருந்து எடுப்பு சாப்பாடு வாங்கவே கூடாது.
ஸுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு வரித்திருக்கும் பெண்டுகள் யாவரும் தலைக்கு எண்ணெய் ஸ்நானம் செய்து ஒன்பது கஜம் புடவையை அணிந்து மடிசார் மாமிகளாக வர வேண்டும். ஏற்கெனவே பார்த்து வைத்த நல்ல நேரத்தில் வந்திருக்கும் பெண்டுகளை கிழக்கு முகமாக நிற்கச் சொல்லி மஞ்சள் தண்ணீரில் கால் அலம்பி, சந்தனம் குங்குமம் கொடுத்து, போஜனம் செய்ய வாருங்கள் என அழைத்து வரவேற்க வேண்டும்.
அப்படி அழைக்கும் பொழுது ஸுமங்கலிகளாய் இறந்தவர்களின் பெயர்கள் தெரிந்திருந்தால் அவர்களின் பெயர்களைச் சொல்லக் கையைத் தட்டி அழைக்க வேண்டும்.
அப்படித் தெரியாவிடில் ‘லக்ஷ்மி வா’ என்று பெயரைச் சொல்லி அழைக்க வேண்டும்.
மருதாணி, நலுங்கு, மஞ்சள் கொடுப்பது முக்கியம். திருமணமாகிச் சென்ற நமது பெண்கள் புடவைக் கலத்திற்கு பக்கத்திலும், பிற பெண்டுகள் மற்ற இலைகளுக்கு முன்பும் அமர வேண்டும்.
எல்லாரும் அமர்ந்ததும், புடவை இலையில் ஆரம்பித்து பிரதக்ஷிணமாகப் பதார்த்தங்களைப் பரிமாற வேண்டும். தெற்கு திசையில் முடியுமாறு பரிமாமறக்கூடாது.
மற்றபடி சாதாரணமாகப் பந்தியில் பரிமாறுவது போலவே பாயஸம், பச்சடி என்ற வரிசைப்படி பரிமாறவும். புடவைக்கலத்துக்கு எல்லாம் பரிமாறிய பின் குழம்பு, ரஸம், தயிர், பானகம், நீர்மோர் ஆகியவற்றைத் தனித்தனி பாத்ரங்களில் அந்தந்த இலைக்குப் பக்கத்தில் வைக்க வேண்டும்.
எல்லா கலத்துக்கும் பரிமாறிய பின், வீட்டு மருமகள் அல்லது அவரவர் வழக்கப்படி ஒருவர் நைவேத்யம் செய்ய வேண்டும். (சிலர் புடவைக்கலத்தில் தொடங்கி ப்ரதக்ஷிணமாக தூபம், கற்பூரம் இவற்றை எல்லாப் பெண்டுகளுக்கும் காட்ட வேண்டும்).
நம் ஆத்து  புருஷர்கள் (கணவன், பிள்ளைகள்) அனைவரும் புடவையை ஸுமங்கலிகளாக இறந்து போன நம் முன்னோர்களாகப் பாவித்து புஷ்பம், அக்ஷதை ஸமர்ப்பித்து நமஸ்காரம் செய்து ப்ரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் உத்தரணியில் ஜலம் எடுத்துக் கொண்டு புடவைக்கலத்திலிருந்து தொடங்கி எல்லாருக்கும் தீர்த்தம் வார்த்தபின் கடைசியில் புடவைக்கலத்தில் முடிக்க வேண்டும். ஆபோசனம் ஆனபின் அனைவரையும் நிதானமாகச் சாப்பிடச் சொல்லி வயிராறப் பரிமாற வேண்டும்.
சாப்பிட்ட பின்னர் அனைவருக்கும் உத்தராபோசனம் செய்யக் கையில் ஜலம் விட வேண்டும். கை அலம்பிய பின்னர், பெண்டுளை கிழக்கு முகமாக உட்காரச் சொல்லி, பானகம், நீர்மோர், சுக்கு – சர்க்கரை கொடுத்துவிட்டு, வெற்றிலைப் பாக்கு, தேங்காய், மஞ்சள், ரவிக்கைத் துணி ஆகியவற்றை ஸுமங்கலிப் ப்ரார்த்தனை நடத்துபவர் தன் சக்திக்கேற்ப அளிக்க வேண்டும். மேலும், புஷ்பம், தக்ஷிணை ஆகியவையும் கொடுக்க வேண்டும்.
புடவைக்கலத்தில் பரிமாறிய உணவை வீட்டில் உள்ள உறவினர் சாப்பிடலாம். பெண்டுகள் சாப்பிட்ட பின்னரே மற்றவர்கள் ஆண் பெண் எல்லாரும் உணவருந்த வேண்டும். பூஜையில் வைத்திருந்த புடவையை அவரவர் வழக்கப்படி வீட்டுப் பெண்களுக்கோ அல்லது ஏழைப் பெண்கள் யாருக்காவது கொடுக்க வேண்டும்.
அரிசியும் சிறிது பாசிப் பருப்பும் போட்டு விட்டு, வெல்லம், ஏலக்காய், நெய் யாவும் எடுத்துக் கொண்டு, கிராமத்து அம்மன் கோயிலில் கொண்டு போய்க் கொடுத்து சர்க்கரைப் பொங்கல் வைத்து
அம்மபாளுக்கு நைவேத்யம் செய்து விநியோகிக்கச் சொல்லவும். வீட்டுக்காரர்கள் வாங்கிக் கொள்ள வேண்டாம். அபிஷேகத்திற்கு பழம், பூ, வெற்றிலைப் பாக்கு கொடுக்கவும்.
இவ்வாறு அவரவர் குல, க்ருஹ ஸம்ப்ரதாயப்படி உரிய காலங்களில் ஸுமங்கலி ப்ரார்த்தனையைச் சிறப்பாகச் செய்து அனைத்து மங்கலங்களையும், பாக்யங்களையும் பெற இறைவன் அருள்வானாக!
மேற்கண்ட ஸுமங்கலீ ப்ரார்த்தனை என்ற வைபவம் நம் கிரஹத்தில் நடைபெறும் பொழுது மிகவும் பக்தி சிரத்தையுடனும், நம்பிக்கையுடனும் நம் வீட்டில் இறந்த ஸுமங்கலீகளை நினைத்து நடத்த வேண்டும்.
அப்படி நடத்தும் பொழுது ஸுமங்கலீகளாய் மதித்த நம் மூதாதையர்கள் நம்மை மிகவும் ஆசீர்வதித்து நம் வீட்டில் நடக்கும் சுப விசேஷங்களை நிர்விக்னமாக நடத்தி நமக்கும் ஆசி வழங்குவார்கள். நம் குடும்பத்தில் சூக்ஷ்ம ரூபமாகி இருந்து நம்மை வழி நடத்துவார்கள்.
காஸ்யபதி சாஸ்திரிகள் அன்னவருக்கும் ஆசிர்வாதம்  பண்ணிட்டு தன் ஆத்துக்கு கிளம்பினார்..
அக்ரகார சம்பாஷணை தொடரும்

Friday, June 14, 2019

பேராபத்து தமிழக மக்கள் மத்தியில்


#என்ன_நடக்கின்றது..
#நம்_தமிழ்நாட்டில்..?

ஏதோ பெரிய ஒரு திட்டத்தோடு தான்......,
இந்துமதம் சார்ந்த கடவுள்கள்,
நம்பிக்கைகள்,
சடங்குகளை,
மன்னர்களை இழிவுப்படுத்தி பேசும் செயல்கள் ...
தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது....
#இந்து_மதம்_தவிர,
மற்ற எந்த மதங்களை பற்றியும் இவர்கள் விமர்சிப்பது இல்லை
#என்பதால்_சந்தேகம் #வலுக்கின்றது...!!
சமீப காலாமாக...
வைரமுத்து - ஆண்டாள் சர்ச்சை பேச்சு,
ஸ்டாலின் – இந்து திருமண சடங்குகள் சர்ச்சை பேச்சு,
கனிமொழி – திருப்பதி வெங்கடாசலபதி சர்ச்சை பேச்சு,
கமல் – சுதந்திர இந்தியாவின் முதல் தீவரவாதி ஒரு ஹிந்து சர்ச்சை பேச்சு,
ரஞ்சித் – ராஜராஜ சோழன் சர்ச்சை பேச்சு,
வீரமணி – கிருஷ்ணர் சர்ச்சை பேச்சு,...
மேலும் இவரின் கணக்கு வழக்கு இல்லாமல் தினமும் பேசும் பேச்சுக்கள்...
எஸ்.எ. சந்திர சேகர் – காவி வேஷ்ட்டி சர்ச்சை பேச்சு,
சு.ப. வீரபாண்டியன்,
சீமான்,
திருமுருகன் காந்தி,
சாகாயம்,
மனுஷ புத்திரன்... இன்னபிற சர்ச்சை பேச்சுக்கள்..
#உன்னிப்பாக_பார்த்தால்..
இவர்களின் எல்லோர் பேச்சுக்களும் ஒரே அலைவரிசையாக  ஒலிக்கின்றது.

அதை விட முக்கியமான பார்க்க வேண்டிய விஷயம்...
இவர்கள் யாரும் பரஸ்பரம் யாரும் யாரையும் விமர்சிப்பது இல்லை..

வைகோ என்ற ஒரு நாடறிந்த நாத்திகர்,
யாரும் அறியா வண்ணம் குடும்பத்துடன்  மதம் மாறி விட்டு...*
நான் மாறவில்லை...
என் குடும்பம் மாறி உள்ளது என்று...
அதற்கான வீடியோ ஆதாரம் வெளியான பின் ஒத்து கொண்டார்...!!

தமிழகத்தின் பிரபலாமானவர்கள் குடும்பங்களை
சேர்ந்தவர்கள்......

திடீர் திடீர் என்று மதம் மாறும் செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றது.
என் அனுபவத்தில்,
நெற்றியில் விபூதி குங்குமத்துடன் வளைய வந்த பல பல குடும்பங்கள்,*
இன்று மதம் மாறி, செல்வ செழிப்புடன் இருப்பதை பார்க்கின்றேன்.* 
 கண்ணுக்கு தெரியாமால் பெரிய பெரிய மாற்றங்களை ஏதோ...
ஒருசில தீய சக்திகள் நிகழ்த்தி கொண்டு இருக்கின்றார்கள்...!!*
என்பது மட்டும் நன்றாக புரிந்து கொள்ள முடிகின்றது..*
மாநில அரசு இதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க போவது இல்லை..
நம்புவதும் முட்டாள்தனம்.

தமிழகத்தின்
பாரம்பரியங்கள்.
நம்பிக்கைகள்,
கலாசாரங்கள் அழிந்து கொண்டு இருக்கின்றது என்பதை விட,
அழித்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதே சரி.
#இந்த_உண்மையை #இந்திய_உள்துறை_அமைச்சர் #அமித்ஷா வின்....
கவனத்திற்கு தகுதி வாய்ந்தவர்கள் யாரேனும் கொண்டு சென்றால் நல்லது..

நம் தாய் தந்தை.. பாட்டன் முப்பாட்டன் வழி வந்த நம்மை...
மாயவலை வீசி,
விஷ பேச்சுக்கள் பேசி,
பணத்தை காட்டி...
நம்மை கொண்டே நமது பாரம்பரியங்கள்,
தெய்வ நம்பிக்கைகள்,
கலாசாரங்களை ஒரு பெரும் கூட்டம் அழித்து,
சிதைத்து கொண்டு இருக்கின்றது.
இத்துடன் “தேச பக்தி”யும் நாசம் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் இது அதி வேகமாக நடந்து கொண்டு இருக்கின்றது.
#இந்தியாவில்_மதமாற்ற #தடைசட்டம்
#கொண்டு_வரவேண்டும்.
மதமாற்றங்கள்,
பிரசாரங்கள்,
பிரசவங்கள் தடை செய்ய வேண்டும்.
மற்ற மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி பேசும்
பேச்சுகளுக்கு
செயல்களுக்கு.....
கடுமையான தண்டனை கிடைக்கும்படி சட்டங்களை வகுத்து அமல்படுத்த வேண்டும்.
#ஜெய்ஹிந்த்
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

Tuesday, May 28, 2019

ஶ்ரீக்ருஷ்ணர் முதன்முதலில் அஹம்காரம் நீக்கியது யாருக்கு தெரியுமா?

யசோதாவிடம் கட்டுண்ட கிருஷ்ணன் : --

கிருஷ்ணர் வெண்ணெய் வேணும்னு யசோதாவை கேட்டார் . அவள் தரமாட்டேன் என்று சொல்ல, கெஞ்சி கேட்கிறார். ஒன்றும் வேலைக்காகாமல் போகவே ஒரு கழியை எடுத்து தாழியை உடைத்துவிடுகிறார்.

அவள் தலை மேல் இருந்ததால் பானை உடைந்து வெண்ணெய் அவள் மேல் விழுகிறது. கோபம் கொண்ட யசோதா அவரை அடிப்பதற்கு துரத்துகிறாள். அவர் கோகுலம் முழுக்க ஓட, தளர்ந்து போன யசோதா அவரை கயிறு எடுத்து உரலுடன் கட்டிவிட முயல்கிறாள்.

எத்தனை பெரிய கயிறை எடுத்தாலும் இரண்டு அங்குலம் குறைவாகவே ஆகிவிடுகிறது.

அப்போது இதை பார்த்துக் கொண்டிருந்த நாரதர் தாயே இறைவனை அகங்காரத்தால் கட்ட முடியாது. பல பெரிய மகான்களும் ரிஷிகளும் கோபத்தாலும் அகங்காரத்தாலும் இறைவனை கட்ட முயன்று தோற்றுவிட்டார்கள்.

ஆத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இந்த இரண்டு அங்குலம் தான் தூரமாக கடைசி வரை நின்றுவிடுகிறது. இந்த இரண்டு அங்குல தூரத்தை கடந்து இறைவனை அடைந்தவர் மிக சொற்ப மனிதர்களே.

எப்போது அகம்பாவத்தை விட்டு கோபத்தை விட்டு அவனை சரணடைகிறோமோ அப்போது தான் அவனை அடையமுடியும். அது கூட நாம் அடைய முடியாது. அவனே உவந்து நம்மை அணைத்தால் தான் அவனுடன் சங்கமமாகிறோம்.

இது காதில் விழுந்தது போல யசோதா என்னால் உன்னை கட்ட முடியவில்லை கண்ணா. நான் தோற்றுவிட்டேன். நீயே சொல். உன்னை எப்படி கட்டுவதென்று என்று கயிறை கீழே போடுகிறாள்.

அவள் சிறியது என்று கீழே போட்ட கயிறை எடுத்து தன்னை தானே கட்டிக் கொள்கிறாள் கிருஷ்ணர். அவள் வியந்து பார்க்கிறாள்.

Monday, May 27, 2019

பாகவதருக்கு ஞானம் தந்த ராஜா

落
ஹரி ஓம் நமசிவாய落
*ராமகிருஷ்ண உபநிஷதம்*
அரசனும் பாகவதரும்..
சாஸ்திரங்களும் புராணங்களும் படித்த ஒரு பிராமணர் அரசனிடம்போய் அரண்மனையில் புராணம் வாசித்துச் சொல்லத் தாம் விரும்புவதாகத் தெரிவித்தார். மகாராஜாவே! பாகவதம் மிகச் சிரேஷ்டமான தரும நூலாகும். அதை நீங்கள் நல்ல ஆசிரியரைக் கொண்டு படிக்கவேண்டியது அவசியம் எனக்கு உத்தரவு தந்தால் நான் சொல்லுவேன். நான் தரும் நூல்களை நன்றாகக் கற்ற பெரிய பண்டிதன் என்று சாஸ்திரம் படித்த வித்துவான்கள் அறிவார்கள். அரண்மனையில் பாகவதம் படித்துச் சொல்லவேண்டும். என்பது என்னுடைய ஆசை. வித்துவான்களை உபசரிப்பது அரசர்களுடைய கடமை என்று பிராமணர் கூறினார். அரசன் இயற்கையறிவு படைத்தவன், இவர் பாகவத புராணத்தைப் படித்து அதன் உட்பொருளை உண்மையாக உணர்ந்தவராக இருந்தால், தியான ஜபமோ, தவமோ, செய்து கொண்டல்லவா இருந்திருப்பார்; பணமும் புகழும் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட்டு அரசனுடைய தயவைத் தேடி இராஜமாளிகைக்கு வந்திருக்க மாட்டாரே என்று எண்ணி அவருக்குப் பின்வருமாறு பதில் சொன்னான்;-
பண்டிதரே! உங்களை ஆசிரியனாக அமைத்துக் கொண்டு பாகவதம் கேட்க நானும் விரும்புகிறேன். மறுபடியும் தாங்கள் பாகவதத்தை நன்றாக ஒன்றிரண்டு முறை படித்துவிட்டு வாருங்கள். அரசன் சொன்னதைக் கேட்டு வித்துவான் கொஞ்சம் கோபம் அடைந்தார். ஆனால் அரசனிடம் கோபித்து என்ன பயன்? ஒன்றும் பேசாமல் வீட்டுக்குத் திரும்பிப்போனார். இந்த அரசன் சுத்த மூடன், பண்டிதன் யார், படிக்காதவன் யார் என்று இவனுக்குத் தெரிந்து கொள்ள முடியவில்லை. என்னை பாகவதம் நன்றாகப் படித்துவிட்டு வாருங்கள். என்கிறான்! பன்னிரண்டு வருஷங்கள் நான் சாஸ்திரம் படிப்பதில் செலவழித்திருக்கிறேன். பாகவதம் மனப்பாடமாகவே இருக்கிறது. இந்த அரசன் என்னை மறுபடியும் படித்துவிட்டு வரச் சொல்லுகிறேன் என்றிவ்வாறு தமக்குள் நொந்து கொண்டு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார். மனைவியிடம் நடந்ததைச் சொன்னார். அவள் யோசித்துவிட்டு, என்னவானாலும் அரசன் அரசனல்லவோ? அவன் சொல்லியவாறு இன்னுமொரு முறை பாகவதத்தைப் படித்துவிட்டு மறுபடியும் போய் சன்னிதானத்தில் சொன்னபடியே செய்து விட்டு வந்திருக்கிறேன். என்று கேளுங்கள். எப்படியாவது அரசனைத்திருப்திசெய்து அரண்மனையில் பவுராணிகராக அமர்ந்துவிட்டால் நாம் பலவிதத்தில் லாபம் அடையலாம். என்றாள்.
மனைவி சொன்னபடியே பிராமணரும் தம்முடைய கோபத்தை அடக்கிக்கொண்டு பாகவதத்தை நிதானமாக மறுபடியும் படித்தார். எந்தக் கட்டத்தில் எந்தக் கேள்வி கேட்டாலும் உத்தரம் சொல்லத் தயாராக நூலை நன்றாகப் பாராயணம் செய்துவிட்டு, ஒரு நல்ல நாள் பார்த்து அரண்மனைக்கு மறுபடியும் போனார். அரசன் பிராமணரை மரியாதையாகவே வரவேற்றான். படித்தாகி விட்டதா? என்று அரசன் கேட்க, மகாராஜவே! சன்னிதானத்து உத்தரவுப்படி புராணத்தை நன்றாகப் பலமுறை ஓதிவிட்டு வந்திருக்கிறேன். பாகவதத்தைப் பலமுறை கிரமப்படி விஸ்தாரமாகச் சொல்லி உங்களுடைய கீர்த்தியையும் தருமத்தையும் வளரச் செய்யவேண்டும். என்பதே என் ஆசை என்றார் வித்வான். அரசன் பண்டிதரே! நான் உம்முடைய சீடனாக அமைந்து பாகவதம் கேட்கப் போகிறேன் என்பது நிச்சயம். ஆனால் இன்னும் ஒரு முறை நீங்கள் பாகவதத்தைப் படித்துவிட்டு வாருங்கள்! என்றான். மறுபடியும் இவ்வாறு ஏமாற்றம் அடைந்த பிராமணர் வீடு திரும்பி மனைவியிடம் நடந்த கதையைச் சொன்னார். அவள் இதில் ஏதோ ரகசியம் இருக்க வேண்டும். அரசன் சொற்படி மறுபடியும் படித்துத்தான் தீருங்கள், பார்ப்போம் என்றாள்.
விடா முயற்சியுடன் பண்டிதர் மறுபடியும் படிக்க ஆரம்பித்தார். மறுபடியும் ஏமாற்றம் அடையக் கூடாதென்று தனியாக ஒரு விடுதி ஏற்படுத்திக் கொண்டு மிக்க கவனமும் ஆழ்ந்த சிந்தனையும் செலுத்திப் படித்தார். இந்த முறை பாகவதத்தைப் படிக்கும்போது அவர் அந்த நூலில் புதிய கருத்துக்களைக் கண்டார். அவரையும் அறியாமல் புருஷோத்தமன் அவதார மகிமை அவர் உள்ளத்தைக் கவர்ந்தது. சரியான வேளையில் சாப்பிடுவதையும் மறந்தார். பாகவதத்தில் முந்திக் காணாத உண்மைகளை யெல்லாம் கண்டார். வீட்டுக்கும் போகாமல் தாம் ஏற்படுத்திக்கொண்ட ஆசிரமத்திலேயே காலம் கழித்தார். புகழ், தனம், கவுரவம், இவையெல்லாம் அற்பப்பொருள்கள் என்று தோன்ற ஆரம்பித்தது. பிறகு பாகவதம் படிப்பதையும் விட்டு விட்டுத் தியானத்திலே ஆழ்ந்து விட்டார். அரசன் மாளிகைக்குப் போகும் எண்ணத்தையும் துறந்துவிட்டார். குடும்பத்தைக் கவனியாமல் இவ்வாறு தியானத்திலும் ஜபத்திலும் தன் புருஷன் காலம் கழிப்பதைப் பார்த்த மனைவி மிகவும் வருத்தமுற்றாள். எதையோ ஆரம்பித்து இப்படி விபரீதமாக முடிந்ததே என்று அவள் துக்கப்பட்டு, ஒன்றும் தோன்றாமல் அரசனிடம் சென்று தன் கஷ்டத்தைச் சொல்லிக்கொள்ள அனுமதி கோரினாள். அரசன் அவளிடம் நடந்ததைக் கேட்டறிந்தான். அரசனுக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டாகி அந்த வித்துவானைப் பார்ப்பதற்குத் தானே புறப்பட்டுச் சென்றான்.
அரசன் ஆசிரமத்தை யடைந்தபோது, பிராமணருடைய முகத்தில் புது தேஜஸ் ஜொலிப்பதைக் கண்டான். சம்பூரண ஞானம் அடைந்த ஒளி பிரகாசித்தது. அரசன் விழுந்து கும்பிட்டு, கடவுளின் அருள் பெற்றுவிட்டீர். உங்களை நமஸ்கரிக்கிறேன். நான் செய்த அபசாரத்தை மன்னிக்கவேண்டும் என்று சொன்னான். படிப்பும் புலமையும் வேறு; படித்த படிப்புடன் பக்தியும் கலந்து மெய்யுணர்வாவது வேறு.
落ஹரி ஓம் நமசிவாய落https://www.youtube.com/playlist?list=PLBSFBAFh-eCyhs5_EDsCED_ti_30WgYXq

Friday, April 19, 2019

சித்ரா பௌர்ணமி வ்ரதம்

#சித்ரா_பவுர்ணமி #விரதம்_இருப்பது_எப்படி?
☘☘☘☘☘☘☘☘
சித்ராபவுர்ணமியன்று வீட்டை சுத்தம் செய்து பூஜைஅறையில் விநாயகர் படத்தை வைத்து அரிசி மாவால் சித்ரகுப்தன் படம் வரைந்து கையில் ஏடும், எழுத்தாணியும் வரைய வேண்டும். சித்ரகுப்தா என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும். அன்று உப்பில்லாத உணவுகளையே (கனிகள்) உண்ண வேண்டும்.

மாலையில் பவுர்ணமி தினம் உதயமானதும் சித்ரகுப்தனுக்கு பூஜை செய்ய வேண்டும். தலைவாழை இலையில் சர்க்கரை பொங்கல் அல்லது வெண்பொங்கலை படைக்க வேண்டும். பயிற்றம் பருப்பு, எருமைப்பாலும் சேர்த்து பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம்.

படையலுடன் எல்லாக்காய்கறிகளும் போட்ட கூட்டு நிவேதிக்க வேண்டும். தொடர்ந்து தீபாராதனை காட்டி ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் கொடுக்க வேண்டும். ஏழை மாணவர்களுக்கு பேனா, பென்சில், நோட்டு கொடுக்கலாம். அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது.

சித்ராபவுர்ணமி விரதம் இருந்து சிவபெருமானை வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும். ஆயுளை அதிகரிக்க செய்யும் ஆற்றல் இந்த விரதத்திற்கு உண்டு. மேலும் மன அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும், வறுமை அகலும். புண்ணியங்கள் சேரும்.

திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சித்ராபவுர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று அன்னதானம் செய்தால் கல்வி, வேலை, பதவி, அரசியல், ஆரோக்கியம், திருமணம், வழக்கு குடும்பப்பிரச்சினைகள் நீங்கி மேன்மை உண்டாகும்.

Thursday, April 18, 2019

கருடாழ்வார் மற்றும் மஹாவிஷ்ணு இடையே நடந்த சம்பாஷணை

படித்ததில் பிடித்தது...
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஒருமுறை மகாவிஷ்ணு அவருடைய பிரியமான கருடனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது
திருமால் கருடனை பார்த்து கேட்டார்

"இந்த உலகில் எத்தனை வகையான மனிதர்கள்
உள்ளனர் கருடா...?" என்று.

அதற்கு சற்றும் யோசிக்காமல் கருடன் சொன்னார்

"மூன்று வகையான மனிதர்கள் உள்ளனர்
மகா பிரபு" என்றார்.

மகாவிஷ்ணு "என்ன மூன்று விதமான மனிதர்களா? இத்தனை கோடி மக்களில் மூன்று விதமான
மக்கள் தானா உள்ளார்கள்" என்று கேட்டார்.

"மகா பிரபு ஒன்றும் அறியாதவர் போல நீங்கள் கேட்பது ஏன்...? என்னை வைத்து என்ன
நாடகமோ தெரியவில்லை...? ஆனால் தங்கள் அருளால் நானறிந்தவரை *மூன்று விதமான*
மக்கள் தான் உள்ளனர் என்று கூறினார் கருடன்.

"அப்படியானால் அவர்களைக் கூறு பார்க்கலாம்" என்றார் மகாவிஷ்ணு.

கருடன் சொன்னார்

"பிரபு முதல் வகையினர்: *பறவையும் அதன் குஞ்சுகளும்* போல் உள்ளனர்.

இரண்டாம் வகையினர்: *பசுவும் அதன் கன்றும்* போல் உள்ளனர்.

மூன்றாம் வகையினர்: *கணவனும் மனைவியும்* போல் உள்ளனர் அவ்வளவு தான் மகா பிரபு"
என்றான்.

மகாவிஷ்ணு சும்மா விடுவாரா !!! "சற்று விளக்கமாக புரியும்படி சொல்" என்றார்.

சொல்ல துவங்கினார் கருடன்

*முதலில் பறவையும் அதன் குஞ்சுகளும்* எப்படியென்றால் ...
🦇🦇🦇🦇🦇🦇
பறவை முட்டையிட்டு குஞ்சு பொரித்துவிட்டு அதன் குஞ்சுகளுக்காக உணவு தேடிப்
போகிறது, அது சென்று வருவதற்குள் பாம்புகளும் மற்ற பறவைகளும் தனது உணவாக அந்த
குஞ்சுகளையே உண்டு விடுகிறது, காணாமல் போன குஞ்சுகளுக்காக பறவை பெரிதாக
கவலையெல்லாம் படுவதில்லை, இருப்பதற்கு உணவு ஊட்டும்.

அதுபோல் குஞ்சுகளுக்கும்
தன் வாயில் ஊட்டப்படும் உணவு தான் தெரியும், தன் தாய் யார், தகப்பன் யார்
போனது வருமா வராதா எதுவும் தெரியாது, நாளானவுடன் பறக்க முயற்சி செய்து கீழே
விழுந்து மடியும், மீந்து போன பறவை வாழும் வரை வாழும், அவ்வளவு தான்...

இந்த வகை மனிதர்கள் இது போலத்தான் கிடைத்த வேலையை செய்வார்கள், கிடைத்ததை உண்பார்கள், இல்லையா பட்டினி கிடப்பார்கள்.

வாழ்க்கை சக்கரத்தில் அகப்பட்டு , புற வாழ்க்கைக்காக அலைந்து , திரிந்து , கடைசியில் மரணிப்பார்கள்.

*அவர்களுக்கு பகவானே உங்களை நினைக்க கூட தெரியாது*.
வாழ்வார்கள், உயிரோடு வாழும் வரை அவ்வளவு தான்.

*இரண்டாவது பசுவும் கன்றும்* எப்படியென்றால்...
🐂🐂🐂🐂🐂🐂🐂
பசு ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும், அதன் கன்று ஓரிடத்தில்
கட்டப்பட்டிருக்கும். கன்று பசுவைப் பார்த்து சப்தமிடும், பசு கன்றினைப்
பார்த்து சப்தமிடும், கன்றுவுக்கு தெரியும், தாயின் மடியிலிருக்கும் பால் அருந்தினால் தான் பசி அடங்கும் என்று. ஆனாலும் அதன் கழுத்தில் கட்டப்பட்டுள்ள
ஒரு முழம் கயிறு அதனை அதன் தாயிடம் செல்ல விடாமல் தடுக்கிறது, கன்று இழுத்து
இழுத்துப் பார்த்து ஏங்கித் தவிக்கும்.

அது போல *ஒரு சாராருக்கு உங்களை தெரியும்* வரும் வழியும் தெரியும்,

*உங்களால் தான் மனித வாழ்வே நிரந்திர சுகம் பெறும் என்பதும் தெரியும்*,
ஆனாலும் உங்களோடு வர முடியாமல் *பாசம் என்ற ஒரு முழ கயிற்றில் மாட்டிக்கொண்டு* பகவானே உங்களை பார்த்து ,பார்த்து ஏங்கி தவிக்கும்.

*மூன்றாவது கணவனும் மனைவியும்* எப்படியென்றால்...
👳‍♀🧕  👳‍♀🧕 👳‍♀🧕
முன் பின் அறியாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவன், அவளிடம் முகம்
கொடுத்து கூட பேசமாட்டான், அவளைப் பிடிக்காமல் ஒதுங்கி ஒதுங்கி போவான், ஆனால்
அவளோ, அவனைப் பார்த்த நாளிலிருந்து அவன் நினைவால் இருந்து அவனுக்கு பிடித்த
வகையில் உடையுடுத்தி, அவனுக்கு பிடித்த வகையில் உணவு சமைத்து, அவனுக்கு
பிடித்த வகையில் தன்னை அலங்கரித்து கொண்டு,

தான் அவனுக்காகவே பிறந்தவள் என்பதை
அவனுக்கு உணர்த்தி அவனை தன் பக்கம் ஈர்ப்பாள்.

முதலில் வெறுத்த அவன் ஓராண்டுக்குள் அவள் அன்பில் கரைந்து அவள் செல்லும் இடமெல்லாம் செல்கிறான்,
அவளை பிரிய மறுக்கிறான்.

அது போல ஒரு சாரார் இறைவா உங்களை கண்டதில்லை .

ஒரு நாள் யாராவது ஒருவர் மூலமாக
உணர்த்தப்பட்டு உங்களை காண முற்படும் வேளையில், உங்களுக்கு பிடித்தப்படி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள்.

முதலில் சோதிக்கும் நீங்கள் எங்களின் தூய்மையான அன்பில் கரைந்து எங்களோடு வருகி்றீர்கள் எங்களோடு
உறவாடுகிறீர்கள் , முடிவில் உங்களோடு எங்களை ஐக்கியப்பட அனுமதிக்கிறீர்கள். நாங்களும் ஆனந்தமாக உங்களோடு கலந்து விடுகிறோம்

ஆக மூன்று விதமான மனிதர்கள் தான் உலகில்
உள்ளனர் என்றார் கருடன்.

மனம் மகிழ்ந்த *மகாவிஷ்ணு கருடனை வாழ்த்தி தன்னுள் ஏற்றுக் கொண்டார்*....

மஹாபெரியவா தந்த அக்ஷதை

🤘🏵🤘🏵🤘🏵🤘🏵
*மஹா பெரியவா அளித்த அட்சதை!!🙏*

ஒருமுறை விழுப்புரத்துக்கு அருகே வெங்கிடாத்திரி அகரம் என்ற கிராமத்தில் முகாமிட்டிருந்தார் பெரியவா. சென்னை, திருச்சி, கும்பகோணம், சேலம் போன்ற பல ஊர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பெரியவா தரிசனத்துக்காக அங்கே குவிந்தனர்.

இந்தக் கிராமத்தில் மஹாபெரியவா முகாமிட்டிருப்பது அறிந்து, அவரைத் தரிசனம் செய்வதற்காகத் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு சேலத்தில் இருந்து பயணமானார் ராமசாமி ஐயர்.

வெங்கிடாத்திரி அகரத்தில் மஹாபெரியவாளை உள்ளம் குளிரத் தரிசித்து விட்டு, சேலம் புறப்படுவதற்காக உத்தரவு கேட்டார் ராமசாமி

. பெரியவாளும் புன்னகையுடன் அவரை ஆசிர்வதித்து, உத்தரவு கொடுத்தார். அப்போது மேனாவில் (யாத்திரையின் போது பயன்படுத்தப்படும் பல்லக்கு) இருந்தபடியே பக்தர்கள் எல்லோருக்கும் அட்சதையை அவரவர் வஸ்திரத்தில் ஆசிர்வாதமாகப் போட்டுக் கொண்டிருந்தார் பெரியவா.

கருணைத் தெய்வத்தின் திருக்கரங்களால் அட்சதை பெறும் பாக்கியத்தைப் பெரும் பேறாக எண்ணிய பலரும், தங்களது மேல்வேஷ்டியை மற்றும் புடவைத் தலைப்பை அவருக்கு முன் நீட்டி, அதில் விழும் அட்சதையைத் தங்கள் கண்களில் ஒற்றிக் கொண்டு பத்திரப்படுத்தினர்.

இப்படி அட்சதை பெற்றுக் கொள்ள விரும்பி நின்றிருந்தவர்களின் நீண்ட வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டார் ராமசாமி.

பெரியவாளின் அட்சதையுடன் பயணப்படலாமே என்பது அவரது எண்ணம். ராமசாமியின் மனைவியும் ஓர் ஓரமாக நின்றபடி பெரியவா தரிசனத்தில் மெய்மறந்து காணப்பட்டார்.

வரிசையில் நின்றிருந்தவர்கள், ஒவ்வொருவராக நகர்ந்து கொண்டிருந்தனர். இப்போது ராமசாமி ஐயரின் முறை வந்தது.

மிகுந்த பயபக்தியுடன் தனது மேல்வஸ்திரத்தை அகலமாகப் பிரித்து பெரியவாளின் முன்னே ராமசாமி நீட்டினார். ஆனால் நிகழ்ந்தது வேறு விதமாக இருந்தது.

தன் ஆசிர்வாதமான அட்சதையை அவரது வஸ்திரத்தில் போடாமல் தரையில் மண்ணோடு மண்ணாகப் போட்டார் பெரியவா.

இது கண்டு மிகவும் கலக்கமுற்றார் ராமசாமி. அருகே இருந்த அவரது மனைவியும் ஏகத்துக்கும் வருத்தமுற்றார்

. தரையில் விழுந்த அட்சதையை எடுக்கலாமா, வேண்டாமா என்கிற தயக்கத்தில் இருந்தனர் இருவரும்.

அப்போது முகம் நிறைய பிரகாசத்தோடு, ‘என்ன ராமசாமி..அட்சதை தரைல விழுந்துடுத்தேனு பார்க்கறியா… மண்ணோடு மண்ணாக அந்த அட்சதையை அப்படி எடுத்து நீயும் உன் பார்யாளும் மடில முடிஞ்சு வெச்சுக்கோங்கோ’ என்றார் பெரியவா நிதானத்துடன்.

இந்த நிகழ்வைக் கண்டு சுற்றி நின்றவர்களும் ஒரு கணம் திகைத்தனர். எல்லோருக்கும் அவரது மேல்வஸ்திரத்திலோ, புடவையிலோ அட்சதையை ஆசிர்வாதத்தோடு தெளிந்த மஹாபெரியாவா, இவரது முறை வரும்போது மட்டும் ஏன் மணலில் – அதாவது தரையில் அட்சதையைப் போட்டார். இதற்கு என்ன அர்த்தம் என்ன என்று குழம்பினார்கள்.

மஹாபெரியவா என்கிற கருணைத் தெய்வம் மனம் கனிந்து சொல்கிறதே என்பதற்காக தரையில் குனிந்து, மணலோடு மணலாகச் சிதறிக் கிடந்த அட்சதையை ஒருவிதமான உணர்ச்சியுடன் பொறுக்கி எடுத்து மடியில் முடிந்து கொண்டனர் இருவரும்.

‘போயிட்டு வாப்பா ராமசாமி…. அதான் உனக்கு உத்தரவு அப்பவே கொடுத்துட்டேனே! என்று வரை புன்சிரிப்புடன் வழியனுப்பினார் பெரியவா.

ராமசாமிக்கு அடுத்து வரிசையில் வந்தவர்களுக்கு வழக்கம் போல் மேல் வஸ்திரத்திலேயே அட்சதை போட்டு ஆசிர்வதித்து அனுப்பிக் கொண்டிருந்தார் மஹான்.

சேலம் திரும்புவதற்கு ராமசாமி ஐயருக்கு மஹாபெரியவா உத்தரவு கொடுத்த பிறகு, வெங்கிடாத்திரி அகரத்தில் இருந்து மனைவியுடன் வண்டியில் புறப்பட்டார்.

சுகமான காற்று உடலை வருடிக் கொண்டிருந்தாலும், ராமசாமி ஐயரின் மனம், மணலில் போட்ட அட்சதையிலேயே இருந்தது.

சேலத்துக்கு வண்டியில் போகும்போது ராமசாமியும் அவரது மனைவியும் இயல்பான நிலையில் இல்லை. அட்சதையை பெரியவா மணல் மேல் போட்ட நினைவே ஃப்ளாஷ்-பேக் போல் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது.

ஏன் மணலில் அட்சதையைப் போட்டு அதை எடுத்துக் கொள்ளச் சொன்னார்? மற்றவர்கள் போல் நமக்கு வஸ்திரத்தில் போடவில்லையே… இந்த நிகழ்வு எதை உணர்த்துகிறது?

சேலத்தை நோக்கி வண்டி வேகத்தில் போய்க் கொண்டிருந்தாலும் ராமசாமியின் மனதில் வெறுமையே இருந்தது.

எல்லோருக்கும் அவரவர் மேல்வஸ்திரத்திலோ, புடவைத் தலைப்பிலோ விழுமாறு அட்சதையைப் போட்ட மஹா பெரியவா, தனக்கு மட்டும் மேல்வஸ்திரத்தில் போடாமல் ஏன் தரையில் போட்டார் என்று மருகிப் போனார் ராமசாமி ஐயர்.

எவ்வளவு முயன்றும்,யோசித்தும் இதற்கான விடை அவருக்குக் கிடைக்கவில்லை. மகான்களின் இயல்பை மனிதர்கள் அறிய முடியுமா?

ஆனால், சேலத்துக்கு வந்ததும் இந்த நிகழ்வு அன்றே அவரது நினைவில் இருந்து விடுபட்டது. காரணம் - வழக்கமான அவரது வக்கீல் பணிகள். இயல்பு வேலைகளில் பிஸியானார் ராமசாமி ஐயர்.

வெங்கடாத்திரி அகரத்தில் இருந்து சேலத்துக்கு வந்த இரண்டாம் நாள் மதியம்... அன்று ஏதோ முக்கிய பணிக்காக வீட்டில் இருந்த ராமசாமி ஐயருக்கு, கனமான பதிவுத் தபால் ஒன்று வந்தது.

அனுப்பியவர் முகவரியைப் பார்த்தார். அதில், அவரது மாமனாரின் பெயரும் விலாசமும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சாதாரணமாக ஒரு இன்லேண்ட் கடிதம் எழுதி, சம்பிரதாயத்துக்கு விசாரிப்பவர், பதிவுத் தபாலில் என்ன அனுப்பி இருப்பார் என்கிற ஆவலுடன், மனைவியையும் உடன் வைத்துக் கொண்டு பிரித்தார்.

உள்ளே - ரெஜிஸ்திரார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரம் ஒன்று இருந்தது. ஒரு கணம் குழம்பியவர், பத்திரத்தில் உள்ள வாசகங்களை முழுக்கப் படித்து விட்டுப் பிரமித்துப் போனார்.

பத்திரத்துடன் இருந்த ஒரு கடிதத்தில், ராமசாமியின் மாமனார் தன் கைப்பட எழுதி இருந்தார்: ‘வக்கீல் தொழிலில் சிறந்து விளங்கினாலும், சொந்தமாக நில புலன் எதுவும் இல்லாமல் இருந்து வரும் உங்களுக்கு - உங்கள் பெயரிலேயே ஏதாவது நிலம் எழுதி வைக்கலாம் என்று திடீரெனத் தோன்றியது.

அதன் வெளிப்பாடுதான், இத்துடன் இணைத்திருக்கும் பத்திரம். தங்கள் பெயருக்குப் பதிவு செய்து, சில ஏக்கர் நன்செய் நிலங்களை எழுதி வைத்திருக்கிறேன்.

இறைவனின் அருளுடனும், தாங்கள் வணங்கும் மகா பெரியவா ஆசியுடனும் இதை நல்லபடியாக வைத்துக் கொண்டு சுபிட்சமாக வாழுங்கள்.’

ராமசாமி ஐயருக்கும் அவரது மனைவிக்கும் ஏக சந்தோஷம்.இருக்காதா பின்னே!எதிர்பார்க்காத நேரத்தில் இப்படி ஒரு சொத்து - அதுவும் நல்ல நன்செய் நிலம் - தானாகக் கைக்கு வந்து சேர்ந்தால், மனம் மகிழ்ச்சியில் துள்ளாதா? பரவசப்பட்டுப் போனார்கள் இருவரும்.

மாமனாரிடம் இருந்து தானமாக வந்த நில புலன்களில் ஏற்கெனவே பயிர்கள் நன்றாக விளைந்து கொண்டிருந்தன.

மகசூலும் நன்றாக இருந்தது. அதனால், இதைப் பராமரிப்பதில் பெரிதாக ஒன்றும் சிரமம் இல்லை ராமசாமி ஐயருக்கு. நேரம் கிடைக்கும்போதெல்லாம் நேரில் போய் நல்ல முறையில் பார்த்து வந்து கொண்டிருந்தார்.

இதற்கிடையில் வெங்கடாத்திரி அகரத்தில் மகா பெரியவா,அட்சதையை ஏன் தரையில் போட்டார் என்கிற சம்பவத்தை ஏறக்குறைய மறந்தே போயிருந்தார் ராமசாமி ஐயர்.

ஆனால், அப்படி அட்சதை போட்டு ஆசி புரிந்த மகா பெரியவா இதை மறப்பாரா?

நில புலன்கள் சேர்ந்தால் நிலச் சுவான்தார்தானே! இப்படி ஒரு நிலச் சுவான்தார் ஆன பிறகு, ‘இந்த நல்ல செய்தியை மகா பெரியவாளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.’ என்று எண்ணினார் ராமசாமி ஐயர்

. ஒரு நாள் காஞ்சிக்குப் போய் அவரைத் தரிசிக்க ஆர்வம் கொண்டார்.அந்த நாளும் கூடிய விரைவிலேயே வாய்த்தது.

தனது நிலத்தில் இருந்து முதன் முதலாக அறுவடை ஆன நெல்லில் இருந்து, அரிசி அரைத்துக் கொண்டு, அந்த அரிசி மூட்டைகளுடன் காஞ்சிபுரம் மடத்துக்கு வந்தார் ராமசாமி ஐயர்.

அந்த மூட்டைகளுள் ஒன்றில் இருந்து சில அரிசி மணிகளை எடுத்து, தன் மேல்துண்டில் முடிந்து வைத்துக் கொண்டு ஒரு குழந்தையைப் போல் மகா பெரியவா முன்னால் போய் நின்றார். உடன், அவரது மனைவியும் இருந்தார்.

“வாப்பா ராமசாமி... சேலத்துலேர்ந்து வர்றியா? இல்லே உன் வயல்லேர்ந்து நேரா இங்கே வர்றியா?” - மகா பெரியவா கேட்டதும், ராமசாமி ஐயர் வாயடைத்துப் போனார். ஏதும் பேசவில்லை.

மகா பெரியவாளே தொடர்ந்தார்:“இப்பல்லாம் உன் நிலத்துல விளைஞ்ச அரிசியைத்தான் சமைச்சு சாப்பிடுறாயாமே?”

மகா பெரியவா திருவாய் மலர்ந்தருளிய மறுகணம் விதிர்விதிர்த்துப் போனார் ராமசாமி ஐயர். சட்டென்று நிதானத்துக்கு வந்து

, “ஆமா பெரியவா.

வெங்கடாத்திரி அகரத்துக்கு வந்து பெரியவாளைத் தரிசனம் பண்ணிட்டு ஊருக்குப் போன உடனே,என் மாமனார்கிட்டேர்ந்து பத்திரம் வந்தது.

நிலமே இல்லாமல் இருந்த எனக்கு, அவராவே சில ஏக்கர்களை எழுதி சாசனம் பண்ணி, தபால்ல அனுச்சிருந்தார்

. அதான் பெரியவாளைப் பாத்துச் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்.முதல் விளைச்சல்ல வந்த சில அரிசி மூட்டைங்களையும் மடத்துக்குக் காணிக்கையா கொண்டு வந்திருக்கேன்.”

“எல்லாம் சரிதான். அன்னிக்கு உன் மேல்வஸ்திரத்துல போட வேண்டிய அட்சதையை நிலத்துல போட்டபோது குனிஞ்சு எடுக்கறப்ப, அவ்வளவு வருத்தப்பட்டியே ராமசாமி... இன்னிக்கு அதே மாதிரிதானே, இந்த அரிசியைக் கொண்டு வர்றதுக்கும் குனிஞ்சு நிமிர்ந்திருக்கே! உன் சொந்த நிலத்துல குனிஞ்சு, கதிர் அறுத்த நெல்லை அரிசி ஆக்கி, உன் மேல்வஸ்திரத்துல முடிஞ்சு வெச்சுண்டு இப்ப என்னைப் பாக்க வந்திருக்கே?! இல்லியா?” என்று சொல்லி விட்டு, இடி இடியென பெரியவா சிரித்தபோது, ராமசாமியின் கண்களில் இருந்து பொலபொலவென்று நீர் சுரந்தது. மகா பெரியவாளின் ஞான திருஷ்டியை உணர்ந்து மெய் சிலிர்த்தார்.

பெரியவாளின் இந்தப் பேச்சைக் கேட்ட பிறகு அவரது மனைவிக்குப் பேச்சே எழவில்லை.

மேல்வஸ்திரத்தை எடுத்துப் பிரித்து, அதில் முடிந்து வைத்திருந்த அரிசியைக் கையில் திரட்டி, மகா பெரியவாளின் முன்னால் இருந்த ஒரு பித்தளைத் தட்டில் சமர்ப்பித்தார் ராமசாமி. பிறகு, அவரது திருப்பாதங்களுக்குப் பெரிய நமஸ்காரம் செய்தார்.

“ஆமா பெரியவா... அன்னிக்கு நீங்க பண்ண அனுக்ரஹத்தாலதான் எனக்கு இன்னிக்கு இப்படி ஒரு சொத்து கிடைச்சிருக்கு.

கூடிய சீக்கிரமே நிலம் உனக்குக் கிடைக்கப் போறதுங்கறதை சொல்லாம சொன்னேள்! அட்சதையை நிலத்துல போட்டேள். இந்த மூளைக்கு அப்ப இது எட்டலை.

உங்களோட கருணைக்கும், தீட்சண்யத்துக்கும் அளவேது பெரியவா” என்று சொல்லி, முகத்தை மூடிக் கொண்டு தேம்பலானார்.

இதை அடுத்து, அந்தப் பரப்பிரம்மம், தியானத்தில் மூழ்கியது.

‘சொந்தமாக நில புலன் உனக்குக் கிடைக்கும்’ என்பதை தீர்க்க தரிசனமாக ராமசாமி ஐயருக்கு உணர்த்த விரும்பிய மகா பெரியவா, வஸ்திரத்தில் போட வேண்டிய அட்சதையைத் தரையில் போட்டதன் தாத்பர்யம் அவரைத் தவிர வேறு யாரால்தான் புரிந்து கொள்ள முடியும்?

!!மஹா பெரியவா பாதகமல சரணம்!!

ஹர ஹர சங்கர..  ஜெய ஜெய சங்கர..
💧💧💧💧💧💧💧💧